இந்தியாவின் முதன்மையான வேளாண் ஆராய்ச்சி அமைப்பான இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), தண்ணீரைச் சேமிக்கவும், மீத்தேன் போன்ற பசுமை இல்லா வாயுக்களை குறைக்கவும், அரிசி உற்பத்தியை அதிகரிக்கவும் 2 நறுமண பாஸ்மதி அரிசி (களைக்கொல்லி-சகிப்புத்தன்மை கொண்ட (herbicide-tolerant) ) வகையின் விதையினை வணிக ரீதியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டு வகைகளான பூசா பாஸ்மதி 1979 மற்றும் பூசா பாஸ்மதி 1985 மரபணு மாற்றப்படாதவை (non-genetically modified) என்பதோடு மூன்று ஆண்டுகளாக பரிசோதனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு அரிசி வகைகளும், தற்போதுள்ள பூசா பாஸ்மதி 1121 மற்றும் பூசா பாஸ்மதி 1509 வகைகளிலிருந்து மேம்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஸ்மதி அரிசி வகையின் விதை விற்பனை:
புது டெல்லியிலுள்ள பூசா நிறுவனத்தில் (மே 22, 2024) நேரடி விதை நெல் சாகுபடிக்காக Imazethapyr 10% SL-ஐத் (களைக்கொல்லி) தாங்கக்கூடிய பூசா பாஸ்மதி 1979 மற்றும் பூசா பாஸ்மதி 1985 ஆகிய RobiNOweed பாசுமதி அரிசி வகைகளின் விதை விற்பனை தொடக்க விழா நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் அசோக் குமார் சிங், (Director, IARI) ”வடமேற்கு இந்தியாவில் நெல் சாகுபடியில் விவசாயிகளுக்கு முக்கிய கவலையாக உள்ள நீர்மட்ட பிரச்சினை, நெல் நடவு செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை, இவை தவிர்த்து பசுமை இல்லா வாயுக்கள் வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கத்தோடு இந்த புதிய வகை பாசுமதி அரிசி வகைகள் வெளியிடப்பட்டுள்ளது. நேரடி விதை நெல் முறையில் களைகள் ஒரு பெரிய பிரச்சனையாகும், இந்நிலையில் புது தில்லியில் உள்ள ICAR-IARI-ல் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மூலம் இரண்டு RobiNOweed பாஸ்மதி அரிசி வகைகளை உருவாக்கப்பட்டுள்ளது."
"பூசா பாஸ்மதி 1979 மற்றும் பூசா பாஸ்மதி 1985 இவை முதல் GM அல்லாத களைக்கொல்லியை தாங்கும் பாஸ்மதி அரிசி வகைகளாகும்” என குறிப்பிட்டார்.
பூசா பாஸ்மதி 1979:
இந்த ரகமானது களைக்கொல்லியை தாங்கி வளரும் பாசுமதி அரிசி வகை "PB 1121"க்கு அருகில் உள்ள ஐசோஜெனிக் வரிசையாகும். விதை முதல் விதை முதிர்ச்சி காலமானது 130-133 நாட்கள். சராசரி மகசூல் 45.77 q/ ha.
பூசா பாஸ்மதி 1985:
இந்த ரகமானது களைக்கொல்லியை தாங்கி வளரும் பாசுமதி அரிசி வகை "PB 1509"க்கு அருகில் உள்ள ஐசோஜெனிக் வரிசையாகும். விதை முதல் விதை முதிர்ச்சி காலமானது 115-120 நாட்கள். சராசரி மகசூல் 5.2 t/ha.
டாக்டர் சி.விஸ்வநாதன் (இணை இயக்குனர், ஆராய்ச்சி), டாக்டர் ஆர்.என்.படாரியா (இணை இயக்குனர், விரிவாக்கம்), டாக்டர் கோபால கிருஷ்ணன் (தலைவர், மரபியல் பிரிவு), டாக்டர் ஞானேந்திர சிங் (பொறுப்பு. விதை உற்பத்தி பிரிவு), பிரிவுகளின் தலைவர் மற்றும் பூசா இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள், விவசாயிகள், விதை நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Read more:
இஸ்ரேலிய முறையில் அவகேடோ சாகுபடி- ஆண்டுக்கு 1 கோடி வருமானம்!
Rottweiler Attitude- ராட்வீலர் நாய் இதெல்லாம் பார்த்தாலே எரிச்சல் ஆகுமா?
Share your comments