தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் நிலை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்த நிலையில் வெங்காய வரத்து குறைந்தது, இதன் காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிலோ ரூ 30க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்து கிலோ ரூ 70க்கு விற்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
விலை உயர்வு நீடிக்க வாய்ப்பு
இது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறியதாவது: ஹோல் செல் (whole sale) விற்பனையில் குறைந்த பட்சமாக ரூ 26 முதல் அதிக பட்ச விலையாக 50, 55 வரை உள்ளது. 40 முதல் 50 வரை காய்கறி வண்டிகள் சாதாரணமான வரவாகும், வண்டிகளின் எண்ணிக்கை அதற்கும் கீழ் குறைந்தால் விலை உயர்த்தப்படும், எனவே வெங்காயத்தின் விலை உயர்வு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் நிலை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் விலை உயர்வு பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதையடுத்து வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வெங்காய லாரிகள் வந்து கொண்டிருப்பதால் இன்னும் மூன்று நாட்களில் விலை குறையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டில் எடுக்கப்பட் நடவடிக்கைகளைப் போல இந்த ஆண்டும் தேவைப்படும் போது சிறப்பு நடவடிக்கைகள் மூலமாகவும், விலை கட்டுப்பாடு நிதியம் மூலமாகவும், அரசே கொள்முதல் செய்து குறைந்த விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய, முதல்வரின் உத்தரவு பெற்று நுகர்வோரின் நன்மைக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments