இந்தியாவிலேயே செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் அதிக அளவிலான கணக்குகள் துவங்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் தற்போது இரண்டாம் இடத்தை பிடித்திருப்பதாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
செல்வமகள் சேமிப்பு திட்டம்
இந்தியாவில் பெண் குழந்தைகளின் திருமண செலவு மற்றும் பிற செலவுகளுக்கான மாபெரும் சேமிப்பு திட்டமாக செல்வமாக சேமிப்பு திட்டம் விளங்கி வருகிறது. அதாவது, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலேயே செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கை தொடங்கலாம். மேலும், இந்தத் திட்டத்தில் குறைந்தது ரூ.250 முதல் சேமிக்க முடியும். மேலும், இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் மிகவும் பாதுகாப்பான திட்டமாகவும், வட்டி விகிதம் 8% வரைக்கும் வழங்கப்படுவதாலும் எக்கச்சக்கமான பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவங்கி உள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் மட்டுமே 38 லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் குழந்தைகளின் பேரில் பெற்றோர்கள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்தியாவிலேயே செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அதிக அளவிலான கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களில் தற்போது தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பெயரிலும் செல்வமாக சேமிப்புத் திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு திறக்க விரும்பினால் அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ஆன்லைன் கேம்ஸ்: புதிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!
PF பயனாளிகளுக்கு மொபைலில் இப்படி ஒரு வசதி இருக்கா: தெரிந்து கொள்ளுங்கள்!
Share your comments