கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு நடப்பு மாதம், 17 டன் காய்கறி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கோவை - ஷார்ஜா இடையே, 'ஏர் அரேபியா' விமானம் இயக்கப்படுகிறது. வாரம், 7 நாட்களும் இயக்கப்பட்டு வந்த இந்த விமானம், ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, தற்போது, 5 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில், 168 பயணிகளுடன், 3.5 'டன்' கார்கோ எடுத்து செல்லப்படுகிறது.
காய்கறி ஏற்றுமதி (Vegetables Export)
நடப்பு மாதம் இந்த விமானத்தில், காய்கறி மட்டும் அதிக அளவு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக, கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் காய்கறி, காஸ்டிங்ஸ் போன்ற தொழிற்சாலை சார்ந்த 'கார்கோ' எடுத்துச் செல்லப்படும். ஆனால், பிப்ரவரி மாத துவக்கத்தில் இருந்து அதிகளவு காய்கறி (Vegetables) மட்டுமே 'புக்' செய்யப்படுகிறது.
வாரம்தோறும் கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் ஐந்து விமானங்களில், 17.5 டன் காய்கறி ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. புடலங்காய், கொத்தவரங்காய், கருணைக்கிழங்கு, பாகற்காய், வெண்டைக்காய், சின்ன வெங்காயம், கோவக்காய், முருங்கைக்காய் போன்றவை அதிகளவில் அனுப்பப்படுகின்றன.
ஏற்றுமதி அதிகரிப்பு (Increased Export)
காய்கறி அனைத்தும் தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இதற்கு முன்பு வரை, 3.5 டன் கார்கோ தான் அனுப்பப்பட்டு வந்தது. பிப்ரவரி மாதம் பயணிகள் மற்றும் லக்கேஜ் அளவு குறையும்போது, 6 டன் காய்கறி அனுப்பப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
Share your comments