அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாடமே எடுக்காமல், இரண்டு ஆண்டுகள் சம்பளம் பெற்றிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம், சக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 150 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்கு ஒரு தலைமை ஆசிரியர், 5 பட்டதாரி ஆசிரியர்கள், உட்பட மொத்தம் 15 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் பழனிச்சாமி என்ற சமூக அறிவியல் ஆசிரியர், அனுதினமும் காலை 10 மணிக்கு பள்ளிக்கு வருவார். வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு அலுவல் பணி என்று கூறிவிட்டு வீட்டிற்குச் சென்று விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதேநேரத்தில், தமது பாடங்களை நடத்த 3000 ரூபாய் சம்பளத்திற்கு ஆசிரியர் அல்லாத ஒரு பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் பழனிச்சாமி தன்னிச்சையாக நியமித்துள்ளார். இதற்கு பள்ளி நிர்வாகமும் ஒத்துழைத்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
இவரது செயலைக் கண்டித்து அப்பகுதி மக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆசிரியர் பழனிச்சாமி இதேக்குற்றச்சாட்டின் பேரில், இதற்கு முன்பு மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி அரசு உயர்நிலை பள்ளியில் இருந்து இந்தப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேலையேச் செய்யாமல், ஊதியம் வாங்கும் எண்ணம் கொண்ட இந்த ஆசிரியர் போன்றோரை பணிநீக்கம் செய்துவிட்டு, அறப்பணியான ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் இளையத் தலைமுறையினருக்கு அரசு வாய்ப்பு அளிக்க இனியாவது முன்வருமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க...
பளபளக்கும் பப்பாளி-ஆண்மைத்தன்மையை பாதிக்கும்!
இவற்றைத் தவிர்க்காவிட்டால், உங்கள் எலும்புகள் பொடிப்பொடியாவது உறுதி!
Share your comments