கேலோ இந்தியாவில் (Khelo India), சிலம்பாட்டம் இணைக்கப்பட்டது, எட்டு கோடி தமிழர்களுக்கு கிடைத்த கவுரவம்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணமாலை பேசினார்.
கேலோ இந்தியா
சிலம்பாட்டத்தை, 'கேலோ இந்தியா' எனப்படும் விளையாட்டு வளர்ச்சிக்கான தேசிய திட்டத்தில் இணைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை கொன்னுார் காந்திநகர் காலனியில் நேற்று நடந்தது. தமிழகம் முழுதும் இருந்து வந்திருந்த, சிலம்பாட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது: சிலம்பத்தின் வயது நமக்கு தெரியாது. அகத்திய முனிவர் எப்போது வந்தாரோ, அப்போதே சிலம்பாட்ட கலையும் (Silambattam) வந்தது. தமிழகத்திற்கு எவ்வளவு வயதோ, அவ்வளவு வயது சிலம்பத்திற்கு.
நம் பாரம்பரியத்தை விளையாட்டின் வாயிலாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்றால், சிலம்பத்தால் மட்டுமே முடியும். அதனால் தான், கேலோ இந்தியாவில், சிலம்பாட்டதை பிரதமர் மோடி (PM Modi) சேர்த்து இருக்கிறார். இது, எட்டு கோடி தமிழர்களுக்கு கிடைத்த கவுரவம். இனி, இந்த விளையாட்டில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்று காட்டுவோம்.
பிரதமருக்கு நன்றி தெரிவிக்க, உலக சாதனை முயற்சியாக ஒரே நேரத்தில், 100 சிலம்பாட்ட ஆசான்கள், 1,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கூடி இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இரண்டு லட்சம் முறை சிலம்பத்தை சுழற்றியுள்ளனர். இது, ஒரு உலக சாதனை முயற்சி.
மேலும் படிக்க
இந்திய விமானப்படை தினம்: வீரர்கள் சாகசம்!
120 மொழிகளில் தொடர்ந்து பாடிய கேரள மாணவி: கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை!
Share your comments