இயற்கையான முறையில் விவசாயம் செய்து விற்பனை செய்யும் குறு விவாசகிகளுக்கு மத்திய அரசின் உணவு பாதுகாப்பு அமைப்பின் (FSSAI) சான்றிதழ்கள் இல்லாமல் நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருவாய் 12 லட்சம் மற்றும் அதற்கு குறைவான வருவாய் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் வருவார்கள். இந்த விலக்கு வரும் ஏப்ரல் 2020வரை மட்டுமே. மேலும் மத்திய அரசன் 'ஜெய்விக் பாரத் லோகோ' இல் இருந்தும் தற்போது விலக்கு கொடுக்க பட்டுள்ளது.
அடிப்படையில் 'ஜெய்விக் பாரத் லோகோ' என்பது இயற்கையான முறையில் வேளாண்மை செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய அரசால் வழங்க படும் முத்திரை ஆகும்.
50 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலக்கானது விவசாக்கிகளுக்கு மட்டுமே. நிறுவனங்களுக்கு இவ்விலக்கு பொறுத்தது.
2017 ஆண்டு சட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை பொருட்களை நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்பவர்கள் அரசன் இந்த சான்றிதழ்கள் (NPOP, PGS) கட்டாயம் வைத்திருக்க விடும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு அமைப்பானது பல்வேறு ஆய்வுகள் மற்றும் களபணிகளை மேற்கொண்டது. இதில் இயற்கை வேளாண்மை செய்யும் குறு விவசாகிகள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு தற்போது இவர்களுக்கு விலக்கு அளித்துள்ளது.
நம் நாட்டில் பெரும்பாலான இயற்கை வேளாண்மை விவசாகிகள் மற்றும் இயற்கை வேளாண்மை பொருட்களை விற்பனை செய்பவர்கள் (NPOP (National Programme for Organic Production) & PGS (Participatory Guarantee System)) இவ்விரு அமைப்பிலும் பதிவு செய்யாது இருக்கின்றனர்.எனவே அரசு பதிவு செய்யாதவர்களை ஏதேனும் ஒரு அமைப்பில் பதிவு செய்யும் படி அறிவுறுத்தி வருகிறது. இதிலுள்ள விதி முறைகளை மேலும் எளிமையாக்க முயற்சி எடுத்து வருகிறது.
FSSAI கூறுகையில் சிறு மற்றும் குறு இயற்கை வேளாண் விவசாகிகள், விற்பனையாளர்கள் தங்களது விற்பனை பொருட்களின் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மாநில அரசுகள் உணவு பாதுகாப்பினை உறுதி செய்தல் அவசியமாகும் என அறிவுறுத்த பட்டுள்ளது.
Anitha Jegadeesan
Share your comments