1. செய்திகள்

சூரியசக்தியால் இயங்கும் மின்வேலி, பம்ப்செட்டுக்கு மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!

KJ Staff
KJ Staff
Soar PumpSet
Credit : India Mart

சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள், மின் வேலி அமைக்க மானியம் (Subsidy) வழங்கப்பட உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் (Maheshwari Ravikumar) தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், இம்மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பம்ப்செட் மற்றும் மின்வேலிக்கு மானியம்:

வேளாண் நீர்ப் பாசனத்துக்கு தேவையான எரிசக்தியை உறுதி செய்யும் நோக்கத்துடன் தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காதபடியும், விளைபொருட்களின் வருவாயை (Income) பெருக்கிடும் நோக்கத்துடனும், தமிழக அரசு சார்பில் மானியத்தில் சூரியசக்தியால் (Solar power) இயங்கும் பம்பு செட்டுகள் (Pump set) மற்றும் மின் வேலி (Electric fence) அமைக்கப்படுகிறது. இந்தாண்டில் மத்திய அரசின் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 13 சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

70% மானியம்:

இதில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு, 8 எண்கள் சூரியச க்தியால் இயங்கும் 5 முதல் 10 குதிரைத்திறன் (Horse power) வரையிலான ஏசி (AC) மற்றும் டிசி மோட்டார் (DC Motor) பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் 19.82 லட்சத்தில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் சூரிய ஒளி மின்வேலி அமைப்பதினால் விலங்குகள், வேட்டைகாரர்கள், அந்நியர்களின் ஊடுருவல்கள் தடுக்கப்படும். அதனால் விளைபொருட்களின் வருவாய் இழப்பு இல்லாமல், விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின் வேலியினை 5 வரிசை (235), 7 வரிசை (273), 10 வரிசை (325) அமைப்பை தெரிவு செய்து கொள்ளலாம். தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை 1245 மீட்டர் வரை மின் வேலி (Electric Fence) அமைக்க மானியம் வழங்கப்படும். மேலும் சூரிய ஒளி மின்வேலி அமைப்பதற்கான செலவு தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 2.18 லட்சம் மானியம் (Subsidy) வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, வேளாண் விரிவாக்க மையம், பஞ்சுபேட்டை, காஞ்சிபுரம் என்ற 90030 90440 கைபேசி எண்ணிலும்,

செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, 487 அண்ணா சாலை, நந்தனம், சென்னை-35 என்ற 99529 52253 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மாடித் தோட்டத்திற்கான அரசின் சலுகைகள்! விதைகள் முதல் சொட்டுநீர்ப் பாசனம் வரை!

வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் தொழில் தொடங்க தமிழக அரசு கடனுதவி! பயனாளர்களுக்கு அழைப்பு!

ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வந்துவிட்டது பறக்கும் விமான கருவி

English Summary: Solar powered electric fence, pump set subsidy! Call for farmers! Published on: 14 February 2021, 03:59 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.