சோமானி சீட்ஸ் (Somani Seedz) நிறுவனம் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நேற்றைய தினம் தனது புதிய சிவப்பு கேரட் வகை ‘அசுபா 117’ (Azuba 117) குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதில் முன்னோடி நிறுவனமாக இயங்கி வரும் சோமானி சீட்ஸ், உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள தரியாபூர் கிராமத்தில் (மார்ச் 18, 2024) சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய வகை சிவப்பு கேரட் ரகமான அசுபா 117 பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்க நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் திரளான விவசாயிகளும், வேளாண் துறை சார்ந்த வல்லுனர்களும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதன் முக்கிய நோக்கமான, அசுபா 117 என்ற புதிய வகை சிவப்பு கேரட்டை விவசாயிகள் மத்தியில் சோமானி சீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வி. சோமானி தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சோமானி சீட்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.வி.சோமானி, அசுபா 117 என்ற புதிய வகை சிவப்பு கேரட்டின் சிறப்பம்சங்கள் குறித்து கூறுகையில் , “இந்த புதிய வகை சிவப்பு கேரட் நான்டெஸ் (Nantes) பிரிவின் கீழ் வருகிறது. விவசாயிகள் இந்த ரகத்தை செப்டம்பர் முதல் ஜனவரி வரை விதைக்கலாம். மேலும், இந்த வகை சுமார் 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடுகிறது. இந்த வகையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அறுவடைக்கு தயாரான பிறகும், விவசாயிகள் அதை கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு வயல்களில் விடலாம்” என்றார்.
“மேலும், சேமிப்புத் திறனைப் பொறுத்தவரை, விவசாயிகள் இந்த புதிய வகை கேரட்டை 120 முதல் 140 நாட்களுக்கு சேமித்து வைக்கலாம். மற்ற வகைகளைப் போலல்லாமல், இந்த வகை கேரட் சிவப்பு நிறத்திலும் உருளை வடிவத்திலும் இருக்கும், அதாவது மேலிருந்து கீழாக ஒரே மாதிரியாக இருக்கும்."
"இந்த வகையின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இவை 98% உண்ணக்கூடிய ரகம்” என்று தனது உரையில் கே.வி.சோமானி குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில், பங்கேற்ற எம்.சி.டோமினிக், (நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் கிரிஷி ஜாக்ரன்) உரையாற்றுகையில், "ஒவ்வொரு விவசாயியும் கோடீஸ்வர விவசாயி ஆக மாற ஆசைப்படுவார்கள். ஆனால், பயிர் விளைச்சல் அதிகரித்து, செலவு குறைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். சிறுவயதில் நானும் கோடீஸ்வர விவசாயி ஆக வேண்டும் என்று கனவு கண்டேன். இன்று, நம் நாட்டில் பல விவசாயிகள் கோடீஸ்வர விவசாயிகளாக உள்ளனர். சமீபத்தில், புது தில்லியின் பூசாவில், 'மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா விருது-2023' என்ற மூன்று நாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் நாடு கலந்து கொண்டனர். விழாவில் கௌரவிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் கோடீஸ்வர விவசாயிகள்” என்றார்.
Somani Seedz நிறுவனத்தின் இந்த முயற்சியானது விவசாயிகளுக்கு மேம்பட்ட விவசாய நடைமுறைகள் மற்றும் புதுமையான பயிர் வகைகள் பற்றிய அறிவை வழங்கியதாக பங்கேற்ற விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more:
மாட்டு சாணத்திலிருந்து எரிவாயு- வாகனங்களில் நிரப்ப பங்க்: விலை எவ்வளவு?
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற புளுபெர்ரி- விவசாய பண்ணை அசத்தல்!
Share your comments