பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் தென்மேற்கு பருவ மழை ஜூன் 4 ஆம் தேதி ஆரம்பம் ஆகுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இம்முறை 5 நாட்கள் தாமதமாகவே பெய்யும் என்று கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை என்பது பொதுவாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து துவங்கும். இம்மழையினால் குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் அதிக அளவில் பயன் பெறும். அவ்வகையில் இம்முறை ஜூன் 5 ஆம் தேதி தென் மேற்கு பருவ தொடங்கும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் நம் அண்டை மாநிலமான கேரளா பெறும் இன்னல்களை சந்தித்தது. அந்த பெறும் வெள்ளத்தினால் கேரள அரசு பல இழப்புகளை சந்தித்தது. எனவே கேரளா மக்கள் தென்மேற்கு பருவ மழை என்றதும் சற்று பீதியுடன் இருக்கிறார்கள் எனலாம்.
தமிழகத்தை பொறுத்த வரை பெரும்பாலான நீர் நிலைகளை வறண்டு உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் என்பது குறைத்து காணப்படுகிறது. எனவே தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.
அந்தமான் நிக்கோபர் போன்ற தீவுகளில் மிக சரியான நேரத்தில் பருவமழை துவங்கும் என கணிக்க பட்டுள்ளது. அதன் படி பருவ மழையானது இந்த மாதத்தின் 20 தேதி இல் இருந்து ஆரம்பமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 1ம் தேதி ஆரம்பமாகும் பருவ மழை கேரளாவில் தொடங்கி, பின்பு வடக்கு நோக்கி நகர்ந்து இறுதியில் செப்டம்பர் மாதம் ராஜஸ்தானில் நிறைவு பெறும்.
Share your comments