1. செய்திகள்

விடை பெறத் துவங்கியது தென்மேற்குப் பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

KJ Staff
KJ Staff

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், நீர்நிலைகளுக்கு முக்கிய ஆதாரமாக தென்மேற்குப் பருவமழை (Southwest Monsoon) விளங்குகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, தென்மேற்குப் பருவமழை தான் விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைக்கான நீரை வழங்குகிறது. தென்மேற்குப் பருவமழை ஆரம்பித்து விட்டாலே, விதை விதைக்க ஆரம்பித்து விடுவார்கள் விவசாயிகள். பருவமழை சரியான நேரத்தில் பெய்தால், விவசாயத்திலும் அதிக விளைச்சல் உருவாகும். அதோடு, அணைகள் (Dams) நிறைந்து, தண்ணீர்த் தேவையும் பூர்த்தியாகும். வடமேற்கு இந்தியாவின் (Northwest India) சில பகுதிகளில், தென்மேற்குப் பருவமழை இன்று விலகியுள்ளது.

பருவமழையின் காலம்:

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்கள், தென்மேற்குப் பருவமழை பெய்கிறது. இந்தப் பருவத்தில் முக்கியமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கணிசமான மழைப் பொழிவை பெறுகின்றன. இப்பருவ மழையினால், விவசாயம் செழித்தும், நீர்நிலைகள் நிறைந்தும் காணப்படும். வழக்கத்தை விட, இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு நாம் பெற்றுள்ளோம்.

தென்மேற்குப் பருவமழை விலகல்:

நடப்பு ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை ஜூன் 8-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு, இயல்பை விடவும் பல மாநிலங்களில் பலத்த மழை பெய்துள்ளது. வடகிழக்கு (Northeast) மாநிலங்களில் இன்னும் பெய்து வருகிறது. இந்தநிலையில், வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை இன்று விலகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (Indian Meteorological Center), தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் (National Weather Forecast Center) தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டத் தகவல்:

வடமேற்கு இந்தியாவின் மேற்குப் பகுதிகளில், காற்றின் தாழ்வான அடுக்குப் பகுதியில், புயல் எதிர்ப்பு சுழற்சி (Storm resistance cycle) உருவாகி இருப்பதாலும், ஈரப்பதம் மற்றும் மழைப் பொழிவு கணிசமாகக் குறைந்திருப்பதாலும், மேற்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் இருந்து, 2020 செப்டம்பர் 28 ஆம் தேதி, தென்மேற்குப் பருவமழை உள்வாங்கியது. வழக்கமாக இது செப்டம்பர் 17 ஆம் தேதி நடக்கும் நிகழ்வாக இருந்து வந்தது. தற்போது சில நாட்கள் தாமதமாகியுள்ளது. இதனால், இன்றுடன் தென்மேற்குப் பருவமழை முடிவடைகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணமே மழை அதிக அளவு பெய்து வெள்ளமாக மாறுவது தான்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

உபரிநீரை மட்டுமே தந்து, தமிழகத்தை வஞ்சிக்கிறது கர்நாடகா! காவிரி நீர் குழுமம் தகவல்!

விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மின் இணைப்பு பெற விஏஓ சான்றிதழ் மட்டுமே போதும்!

English Summary: Southwest monsoon begins to answer! Meteorological Center Info! Published on: 29 September 2020, 02:57 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.