கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நெல், கரும்பு, பருப்பு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவை இந்த ஆண்டு இந்தியாவில் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன.
கோவிட்-19 தொற்று பரவியுள்ள நிலையிலும் விவசாயிகளின் உழவுப் பணிகளும், விவசாயத்தின் இதர பணிகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசு நடவடிக்கை (Union Government)
வட்டிமானியம், பயிர்க்கடன், கிசான் கடன் அடை, கால்நடைகள் வாங்க மானியம் என விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்க முனைப்பு காட்டி வருகிறது. இதன் பயனாக காரீப் பருவத்தில் விதைகளை விதைப்பதற்கான நிலப் பரப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.
கோடை காரீப் பருவத்தில் விதைப்புக்கான நிலப்பரப்பு
நெல் (Paddy)
நடப்பு ஆண்டில் நெல் விதைகள் 120.77 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விதைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே பருவத்தில் மொத்தம் 95.73 ஹெக்டேர் நிலப்பரப்பில் விதைக்கப்பட்டது.
பருப்பு தானியங்கள் (Cereals)
கடந்த ஆண்டு 24.49 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பருப்பு தானியங்கள், நடப்பு ஆண்டில் 64.25 லட்சம் ஹெக்டேர் பரப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
சத்து தானியங்கள் (Coarse Cereals)
சோளம், வரகு போன்ற தானிய வகைகள் இந்தப் பருவத்தில் மொத்தம் 93.24 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 71.96 ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்பட்டன.
எண்ணெய் வித்துக்கள் (Oil seeds)
எண்ணெய் வித்துக்கள் 139.37 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான நிலத்தில் விதைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 75.27 லட்சம் ஹெக்டேரில் விதைக்கப்பட்டன.
கரும்பு(Sugarcane)
இந்த ஆண்டு, மொத்தம் 50.89 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் கரும்பு நடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே பருவத்தில் 50.59 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நடப்பட்டன.
சணல்(Jute)
சணல் மற்றும் அதைப் போன்ற பயிர்களுக்கான விதைப்பு மொத்தம் 6.87 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 6.82 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டன.
பருத்தி(Cotton)
பருத்தி மொத்தம் 104.82 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது மிகவும் அதிகம். கடந்த ஆண்டு 77.71 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்பட்டது.
நெல் மற்றும் தானியங்களின் விதைப்பு பரப்பு அதிகரித்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க ...
நிலக்கடலையில் சாகுபடியில் லாபம் அள்ளிக் குவிக்கலாம்...
வறண்ட குறுவை நாற்றங்கால் - பயிரை காக்க குடங்களில் தண்ணீர் கொண்டு ஊற்றும் விவசாயிகள்!
Share your comments