அரியலூர் மாவட்ட கலைஞர் உரிமைத் திட்டம் முதல் கட்ட விண்ணப்ப முகாம் மற்றும் இரண்டாம் கட்ட விண்ணப்ப முகாம்களில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அரியலூர் மாவட்ட கலைஞர் உரிமைத் திட்டம் முதல் கட்ட விண்ணப்ப முகாம் மற்றும் இரண்டாம் கட்ட விண்ணப்ப முகாம்களில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாம் தேதி: 19.08.2023 மற்றும் 20.08.2023
முதல் கட்ட விண்ணப்பப் பதிவு மற்றும் இரண்டாம் கட்ட விண்ணப்பப் பதிவு நடைபெற்ற அனைத்து இடங்களில், மேற்குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தெரிவித்துள்ளார்.
குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று விண்ணப்பதிவு முகாமுக்கு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களைச் சரிபார்ப்புக்கு எடுத்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்?
டோக்கன், விண்ணப்பங்கள் மட்டுமல்லாமல் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகிய 4 அடிப்படை ஆவணங்களை கொண்டு வரவேண்டும். எனவே இந்த 4 ஆவணங்கள், டோக்கன், விண்ணப்பம் ஆகிய 6 தாள்களுடன் பயனாளிகள் வந்தால் போதும். ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் இல்லாவிட்டால் அதை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி
- மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருக்க வேண்டும்.
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் கீழே உள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும்.
- ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கும் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும்.
- ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிடக் குறைவாகப் பயன்படுத்தும் குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.
மேலும் படிக்க:
ஆகஸ்ட் 16 ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு: மக்கள் மகிழ்ச்சி!
Share your comments