பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்பே பொங்கல் சிறப்பு பேருந்துகள், மற்றும் அதன் முழு விவரங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடதக்கது.
இதனையடுத்து சிறப்பு ரயில்களின் விவரங்களும் வெளியாகி உள்ளன. வாருங்கள் பார்ப்போம்,
தாம்பரம்-திருநெல்வேலி: ரயில் எண் (06001) மற்றும் (06002)
(06001) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12ஆம் தேதி இரவு 09.45 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 08:15 மணிக்கு திருநெல்வேலியை அடையும். (06002) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி இரவு 09.30 மணிக்கு ரயில் (06002) புறப்பட்டு, மறுநாள் காலை 07.55 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
சென்னை-நாகர்கோவில்: ரயில் எண் (06005) மற்றும் (06006)
(06005) சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி பிற்பகல் 03.30 மணிக்கு ரயில்புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04.20மணிக்கு நாகர்கோவிலை அடையும். (06006) நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி பிற்பகல் 03.10 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 05.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
நாகர்கோவில்-தாம்பரம்: ரயில் எண் (06003) மற்றும் (06004)
(06003) நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16ஆம் தேதி மாலை 04.15மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். (06004) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 17ஆம் தேதி பிற்பகல் 03.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
திருநெல்வேலி-தாம்பரம் (வழி:தென்காசி): ரயில் எண் (06040)
(06040) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 16ஆம் தேதி இரவு 7மணிக்கு ரயில் புறப்பட்டு, (தென்காசி, விருதுநகர், மதுரை, திருச்சி, விருத்தாசலம் வழியாக) தாம்பரத்தை மறுநாள் காலை 07.55 மணிக்கு வந்தடையும்.
தாம்பரத்தில் இருந்து ஜனவரி 17ஆம் தேதி காலை 10.45 மணிக்கு ரயில் எண் (06039) புறப்பட்டு, இரவு 10.30மணிக்கு திருநெல்வேலியை அடையும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை (டிசம்பர்-25) காலை 8மணி முதல் தொடங்கும். இம்முறையும் தமிழகம் முழுவதும் மக்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட அரசு, இந்த சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.
மேலும் படிக்க:
Share your comments