வரவிருக்கும் தைப்பூச திருவிழாவையொட்டி, கோயம்புத்தூரிலிருந்து இருந்து பழனிக்கு ஜனவரி 29 முதல் 5 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ம் ஆண்டிற்கான தைப்பூச விழா பிப்ரவரி 5 ஆம் தேதி தமிழகமெங்கும் கொண்டாடப்படவுள்ளது. முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்து முடிந்தது. சில நாட்களிலேயே தைப்பூச விழாவும் வருவதால், பழனியில் முருகப் பெருமானை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தவன்னம் உள்ளனர். பழனி, திருச்செந்தூர் மற்றுமுள்ள அறுபடை வீடுகளுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கானோர் நடைபயணம் மேற்கொண்டு வேண்டுதல்கள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு கோவையில் இருந்து பழனிக்கு 5 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மதுரை ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பயணிகளின் வசதிக்காக திண்டுக்கல்-கோவை இடையே பொதுப்பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல கோவையில் இருந்தும் பழனிக்கு செல்லும் பொதுப்பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில் (வ.எண்.06077), 29-ந் தேதி,பிப்ரவரி 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில் கோவையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் (வ.எண்.06078) திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது.
இந்த ரயில்கள், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி ரோடு, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன் சத்திரம், அக்கரைப்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் மதுரை வர விரும்பும் பயணிகள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.25 மணிக்கு கோவை-நாகர்கோவில் செல்லும் ரயிலில் ஏறி மதுரை வந்தடையலாம்.
மதுரையில் இருந்து பழனி செல்ல விரும்பும் மதுரை பயணிகள் நாகர்கோவில்-கோவை செல்லும் ரயிலில் மதுரையில் இருந்து 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் சென்றடையும் வசதியும் உள்ளது.
தைப்பூச திருவிழாவின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்
வரலாற்று நம்பிக்கைகளின்படி, சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் மகனான கார்த்திகேய பகவான் இந்த நாளில் பிறந்தார். ரிஷி வஜ்ரநாக மற்றும் இளவரசி வரங்கியின் மகனான சூரபத்னத்துடன் (அசுரன்) போருக்கு முன்பு பார்வதி தேவி முருகனுக்கு ஈட்டியை பரிசாக அளித்தது இந்த நாளில்தான் என்றும் பலர் நம்புகிறார்கள். இந்த குறிப்பிட்ட கதையின்படி, தேவர்கள் எண்ணற்ற முறை சூரபத்னத்தால் தோற்கடிக்கப்பட்டனர். எனவே, இறுதியாக, வேறு வழியின்றி, அவர்கள் சிவபெருமானிடம் உதவிக்காகச் சென்றனர், அவர் தனது மாய சக்திகளால் ஆகாஷிக் ஒன்றுமில்லாத (அனுபவமான வெறுமை) ஒரு வலிமைமிக்க வீரனை (கார்த்திகேயா) உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, கார்த்திகேயர் அரக்கனுடன் கொடூரமான போரில் ஈடுபட்டு மனிதகுலத்தின் நன்மைக்காக அவனைக் கொன்றார். ஒருவேளை, முருகப்பெருமான் இந்துக்களின் போர்க் கடவுள் என்றும் அழைக்கப்படுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.
மேலும் படிக்க
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5320 அதிகரிப்பு- அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
Share your comments