1. செய்திகள்

சோதனையில் சிக்கிய கெட்டுப்போன இறைச்சி: உணவகத்தில் நம்பி சாப்பிடலாமா?

R. Balakrishnan
R. Balakrishnan
Spoiled meat caught in the test

அசைவ உணவுகளை விரும்பி உண்பவர்கள் அநேகம் பேர். வீட்டில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவது என்றும் நலம் தான். ஆனால் அதுவே, உணவகங்களில் அசைவ உணவுகளை சாப்பிட்டால், நமக்கு நலம் தருமா என்றால், அது கேள்விக்குறி தான். ஏனென்றால், கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்துவதாக சில  நடத்திய சோதனை முடிவுகள் கூறுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள அசைவ உணவகங்களில், உணவு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஏறக்குறைய 133 கிலோகிராம் எடையுஉணவகங்களில்ள்ள கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர்.

கெட்டுப்போன இறைச்சி (Spoiled Meat)

கேரள மாநிலத்தில் கடந்த மே மாதம் 2 ஆம் தேதி ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வோடு செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் ஷவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஆங்காங்கே, கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இந்த வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள சில அசைவ உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகளைப் பயன்படுத்தி, மக்களின் உயிரோடு விளையாடுவதாக சில புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன் தலைமையின் கீழ், அதிகாரிகள் 4 பிரிவுகளாக சென்று உணவகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பறிமுதல் 

சேலம் மாநகர், அயோத்தியாப்பட்டணம், கொங்கணாபுரம், நங்கவள்ளி, ஓமலுார், மகுடஞ்சாவடி, பெத்தநாயக்கன்பாளையம், பனைமரத்துப்பட்டி மற்றும் இடைப்பாடி போன்ற பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், 19 உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன் மற்றும் நண்டு என மொத்தம் 133.8 கிலோகிராம் எடையுள்ள கெட்டுப்போன இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூபாய் 34,650 மதிப்புள்ள கெட்டுப்போன இறைச்சி அனைத்தும் அழிக்கப்பட்டது. இந்த சோதனையில் மொத்தமாக 8 உணவகங்களுக்கு 13,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுதவிர, மேலும் 22 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன்மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சோதனையில் சிக்கிய 19 உணவகங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், மீண்டும் இதுபோல் கெட்டுப்போன இறைச்சியைப் பயன்படுத்தி மக்களுக்கு தீங்கு விளைவிப்பது தெரிந்தால், மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இனிமேல் அடிக்கடி, அனைத்து உணவகங்களிலும் திடீர் சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்க

கொரோனா உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: WHO சர்ச்சைக் கருத்து!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் குறைந்தது ஆர்வம்!

English Summary: Spoiled meat caught in the test: Can it be trusted to eat in a restaurant? Published on: 12 May 2022, 08:27 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.