மத்திய பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகளில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு துறையில் 230 பிரிவுகளில் சுமார் 1351 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதி தேர்வுகள் கணினி வழி முறையில் நடைபெறும் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் 17 பிரிவுகளைச் சார்ந்த 67 பணியிடங்கள் காலியாக இருப்பதாக சென்னை தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா தெரிவித்துள்ளார். இந்த 17 பிரிவுகளில், 9 பட்டதாரி அளவிலும், 5 மேல் நிலை மற்றும் 3 உயர் நிலை அளவிலும் இருக்குமென கூறியுள்ளார்.
பணியிடங்கள், தேவையான தகுதிகள், விண்ணப்ப முறைகள், தேர்வு குறித்த விவரங்கள் அனைத்தும் https://ssc.nic.in/ அல்லது http://sscsr.gov.in/ என்ற இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு பெண்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எஸ்சி/எஸ்டி ) மற்றும் மாற்றுத் திறனாளிகள் இலவசமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2019 (மாலை ஐந்து மணிவரை மட்டுமே). தேர்வுகள் அக்டோபர் 14 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு வேலையை எதிர் நோக்கி காத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments