
"ஸ்டேட் ஆப் குளோபல் ஏர்" என்ற சுகாதார தாக்கங்களை ஆய்வு செய்யும் நிறுவனம் இந்த ஆண்டுக்கான ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. காற்று மாசினால் மனிதனின் ஆயுட்காலம் வெகுவாக குறைகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். மனிதனின் ஆயுட்காலத்தை பாதிக்கும் நோய்களின் பட்டியலில் இப்போது காற்று மாசு என்பதும் ஒன்றாகிவிட்டது. உடல் பருமன், இரத்த கொதிப்பு, நீரிழிவு, புற்று நோய், மலேரியா போன்ற நோய்களை போல காற்று மாசும் ஒரு கொடிய நோயாகும்.
சுத்தமற்ற காற்றை சுவாசிப்பதால் இதய நோய், சுவாச கோளாறுகள், நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. தற்போதைய ஆய்வில் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளன என் கண்டுபிடிக்க பட்டுள்ளன.

ஆயுட்காலம்
2017ஆம் ஆண்டு அறிக்கையின் படி சீனாவில் மட்டும் காற்று மாசுப்பாட்டால் 8,52,000 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிலும் இதே நிலை தான். மேலும் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி ஆயுட்காலம் 18 - 20 மாதங்கள் குறையும். இதுவே தெற்கு ஆசிய நாடுகளில் 30 மாதங்கள் குறையும், என்று ஹெல்த் எபக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (எச்இஐ) துணைத் தலைவர் ராபர்ட் ஓ கீப் கூறினார்.
திட எரிபொருட்களை சமைக்க அல்லது குளிர்காலங்களில் வெப்பமாக்க போன்ற காரணங்களால் காற்று மாசு படுகிறது. இதனை சுவாசிப்பதால் முன்கூட்டியே உயிரிழக்க நேரிடுகிறது. மக்கள் காற்று மாசினை கட்டுப்படுத்தி அடுத்த தலைமுறையினருக்கு தூய்மையான காற்றினை கொடுக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
Share your comments