1. செய்திகள்

இயற்கை கொடையான நீரை நாம் பாதுகாக்கிறோமா?

KJ Staff
KJ Staff

தண்ணீர் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்த்தது உண்டா? நமது அன்றாட வாழ்க்கையை நீருடனேயே துவங்குகிறோம் ஆனால் காலை முதல் 10நிமிடம் நீர் இல்லை என்றால் நினைத்து பார்த்தது உன்டா? ஏனென்றால்  நீரை வெறும் நீராக மட்டும் பார்பதால் அதனின் முக்கியத்துவம் நமக்கு புரிவதில்லை. நாம் அணியும் பருத்தி துணிகளில் 10,000லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது, தினசரி வாழ்வில் உணவு முதல் எல்லா வேலைக்கும் 100லிட்டர் அளவிலான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது, நாம் குடிக்கும் தேநீர், மண் பாண்டங்கள், ஆனால் இந்த நீர் நமக்கு எப்படி கிடைக்கிறது என்பதை பற்றின யோசனை நமக்கு வந்ததுண்டா? இன்னும் சில இடங்களில்  இந்த நீருக்காக  பெண்கள் பல மயில் கடந்து சென்று நீரைப்பெறுவதற்கு மணிக்கணக்காக காத்திருக்கின்றன.

உலகில் நான்கு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இதில் ஒரு பில்லியன் மக்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். நீர் ஆராய்ச்சிக்குழுவின் பட்டியல் படி 2030 ஆண்டளவில் இந்தியாவில் அரைசதவீத  நீரே  கிடைக்கப்படும் என்கின்றன. இன்று உலகம் இத்தனை வளர்ச்சி அடைந்திருக்கும் நிலையிலும்  நீர் சார்ந்த பிரச்சனைகள் பல ஏற்பட்டாலும் நாம் நீரின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வில்லை என்றே கூறலாம்.

நகர வாசிகளுக்கு நீர் எளிதில் கிடைப்பதால் கிராமப்புறங்களில் நீரின்றி வாடும் மக்களை நினைத்து பார்ப்பதில்லை. நீரின்றி நிலம் வறண்டு, கிணறு வற்றி, மக்கள் விவசாயத்திற்கு தண்ணீர்  இல்லாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதை எத்தனை செய்திகளில் பார்த்திருக்கிறோம். நீர் இயற்க்கை நமக்கு கொடுத்த வரமானது அதனை முடிந்த அளவிற்கு சேமித்து கொள்வது நமக்கு பின்னால் இருக்கும் தலைமுறைக்கு நாம் செய்யும்  நன்மை ஆகும். இந்தியாவில் தற்போதைய  தண்ணீர் தேவைப்பாடு  நீர்ப்பாசனத் தேவை 89%, வீட்டுக்கு 7% மற்றும் தொழிற்துறை பயன்பாடு 4% ஆகவும் உள்ளது. 

இந்தியாவை ஓர்  நீர்ப்பாசன நாடக மாற்ற பெரிய அளவிலான தீர்வை அதிகரிக்கவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் முயற்சிக்கும் அடிப்படையில் மக்களான நாமும் சிறிதளவு பங்கினை அளிக்கவேண்டும். நாம் அன்றாடம்  பயன்படுத்தும் நீரில் தேவையான அளவே பயன் படுத்தி தண்ணீரை சேமித்து நாட்டை நீர் பற்றாக்குறையிலிருந்து பாதுகாக்க வேண்டும். விவசாயத்திற்கு நீர் பாசனம் எத்தனை முக்கியம் என்பதை விவசாயிகளே அறிவார்கள். நீர் இல்லாமல் அவர்கள் படும் துயரை நகரத்தில் வாழும் நாம் என்றாவது பார்த்திருக்கிறோம்?

அசுத்த நீரை பயன்படுத்தி உலகில் மக்கள் நாளுக்கு நாள் காலரா, டைபாய்டு போன்ற நீர்தொற்று வியாதிகளால் பாதிக்கப்படுகின்றனர். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் 60% நீரானது மோசமான பாசனமுறைகள் மற்றும் பாசன நீர் கசிவு ஆகியவற்றால் கலந்து, பயன்படுத்த முடியாமல் நீரினை மாசுபடுத்தி நீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட நீர் நிலைகளை சரியாக பராமரிக்காத போது நீர் மாசடைந்து நீர் பற்றாக்குறை ஏற்ப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையினால் பசி, பட்டினி பொருளாதார இழப்பும் உண்டாகிறது. தண்ணீர் எல்லோருக்கும் உயிர்நீர் என்பதை எல்லோரும் உணர்ந்து அதனை தேவைப்பட்ட அளவே பயன்படுத்தி இயற்கை கொடையான தண்ணீரை பாதுகாக்க வேண்டும்.

English Summary: water a perspective

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.