சத்தீஸ்கர் மாநிலத்தில், ஜாஸ்பூர் மாவட்டத்தில் தன்னைக் கடித்த விஷப் பாம்பை இருமுறை, கடித்த 8வயது சிறுவன் உயிர்பிழைத்தான், ஆனால், பாம்பு பலியாகிவிட்ட வினோதம் நடந்துள்ளது. ஜாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தீபக். தனது வீட்டின் பின்புறத்தில் நேற்று முன்தினம் தீபக் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்தப் பகுதியில் புதரில் இருந்துவந்த விஷப் பாம்பு ஒன்று தீபக் கையில் கடித்து, கைகளில் சுற்றிக்கொண்டது.
பதற்றமடைந்த தீபக் தனது கைகளை உதறி, பாம்பின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றான். ஆனால், பாம்பு அவன் கைகளை இறுகி சுற்றுக்கொண்டது. பாம்பிடம் இருந்து தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தீபக் பாம்பைக் கடித்து, பாம்பையே கொன்றுவிட்டார்.
இதையடுத்து, சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வந்த தீபக் பெற்றோர், அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் தீபக்கிற்கு விஷ முறிவு மருந்து செலுத்தப்பட்டது, தற்போது ஆபத்தான கட்டத்தைக் கடந்து சிகிச்சையில் உள்ளார்.
இது குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு தீபக் அளித்த பேட்டியில் “ நான் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு பாம்பு என் உடலில் ஏறி கைகளைச் சுற்றிக்கொண்டு கைக்கடித்தது. பாம்பின் பிடியிலிருந்து விடுவிக்க கடுமையாக முயன்றும் முடியவில்லை.இதனால், பாம்பிடம் இருந்து தப்பிக்க பாம்பை கடித்தேன், இதில் பாம்பு இறந்துவிட்டது” எனத் தெரிவித்தார்
மருத்துவமனையில் மருத்துவர்கள் கூறுகையில் “ சிறுவனைக் கடித்த பாம்பு, விஷத்தை வெளியேற்றாமல், பற்களால் மட்டும் கடித்துள்ளது. இதனால் சிறுவனின் உடலில் விஷம் ஏறவில்லை. பாம்பு உணவுக்காக வேட்டையாடும்போதுதான் விஷத்தை உமிழும், ஆனால் சிறுவனைக் கடிக்கும் போது பாம்பு விஷத்தை உமிழமில்லை” எனத் தெரிவித்தனர்.
மேலும் படிக்க:
Share your comments