அனுமதியின்றி அரசின் சின்னம், பெயரை பயன்படுத்தினால், ஒரு மாதத்துக்குள் அகற்றும்படி விளம்பரப்படுத்த, டி.ஜி.பி.,க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடுமையான தண்டனை (Heavy Punishment)
தேசிய சின்னங்கள், பெயர்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்துவதில் அதிகாரிகளிடம் அக்கறை இல்லை என்பதால், டி.ஜி.பி.,யையும் இவ்வழக்கில் சேர்த்து பிறப்பித்த உத்தரவு: அரசு சின்னங்கள் மற்றும் பெயர்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகின்றன. அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவி வகித்தவர்களும், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும், அரசு சின்னம், கொடி, பெயரை வாகனங்களிலும், லெட்டர் பேடிலும் பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது.
தலைமை செயலகம், ஐகோர்ட், போலீஸ், பிரஸ் என வாகனங்களில் ஒட்டப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. சட்டத்தின் பிடியில் இருந்து தப்பும் நோக்கில் பலர், இவ்வாறு செயல்படுகின்றனர். சின்னங்கள், பெயர்களை அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். தனியார் வாகனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனுமதியின்றி கொடி, சின்னம், பெயர், ஸ்டிக்கர், சீல் பயன்படுத்தினால், ஒரு மாதத்துக்குள் அகற்றும்படி, ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் வெளியிட டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்படுகிறது. அதன்பின், விதிமீறல் செய்பவர்களுக்கு எதிராக, சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கடமையாற்ற தவறினால், அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்
மேலும் படிக்க
அரசு ஊழியர் காப்பீடு திட்டத்தில் மகன், மகளை சேர்க்க அனுமதி!
நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு!
Share your comments