சான்று பெறாத கலப்பட விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல் விதைகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வரும் சம்பா பருவத்திற்கு தேவையான டிகேஎம்-13, பி.பி.டி-5204, என்.எஸ்.ஆர்- 34449 போன்ற நெல் விதைகள் (Paddy Seeds) அரசு வேளாண் விரிவாக்க மையங்களிலும், தனியார் விற்பனை நிலையங்களிலும் வர தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் சான்று பெறாத கலப்பட விதைகளை விற்றால் விதைகள் சட்டம் 1966-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் சான்றட்டை பொருத்தப்படாத தனியார் விதைகளை வாங்க வேண்டாம். விதை உரிமம் பெற்ற தனியார் விதை விற்பனையாளர்களிடமும், அரசு விரிவாக்க நிலையங்களில் மட்டுமே தகுந்த ரசீது பெற்று விதைகளை வாங்க வேண்டும்.
பதிவு எண், முளைப்புத்திறனுக்கான படிவம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமம் (License) ரத்து செய்யப்படும் என்று சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் கலாதேவி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
ஜூலை 19 இல் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் வெளியீடு: இணையதளங்களில் பார்க்கலாம்!
இயற்கை உரம் தயாரிக்கும் திட்டத்தில் அலட்சியம்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!
Share your comments