தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும், பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் வருகைக் கட்டாயமில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பெற்றோருக்கு கொஞ்சம் ஆறுதலை அளித்துள்ளது. இருப்பினும், அரசின் இந்தக் குழப்பமான அறிவிப்பு ஒருதரப்பினருக்கு வேடிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆல் பாஸ்
கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 10,11,12ம் வகுப்புகளுக்கானப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ் (All Pass) அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு? கடந்த ஆண்டு இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
ஒமிக்ரான்
இதனிடையே ஒமிக்ரான் பரவல் காரணமாக, தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்தது. இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டன. பொங்கல் விடுமுறையை அடுத்து, வரும், 31ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை தொடரும் என, அறிவிக்கப்பட்டது.
குழப்பத்தில் பெற்றோர்
இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை எட்டிய நிலையில், திடீரென அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு பெற்றோரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
அவசர அறிவிப்பு
-
இதன் தொடர்ச்சியாக தற்போது, பள்ளிகள் திறந்தாலும், வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
-
மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் அல்ல எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆனால் கொரோனா குறித்து அச்சம் இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது.
-
பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம்.
நிபந்தனை
நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
Share your comments