வேளாண் படிப்புகளை தமிழ் வழியில் பயில மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்புக் கல்லுாரிகளில், 12 இளநிலை பட்டப்படிப்புகளில், 4,670 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். கடந்த, 23ம் தேதி முதல் இதற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.
தமிழ் வழிக் கல்வி (Tamil Education)
நடப்பாண்டு முதல், தமிழ் வழியில், இளம் அறிவியல் வேளாண் மற்றும் தோட்டக்கலை ஆகிய பட்டப்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன. இதற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இதுவரை, வேளாண் மற்றும் தோட்டக்கலை வகுப்புகளில் தலா 15 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
தமிழ் வழியில் பயில மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளதால், அதற்கான இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
வேளாண் பல்கலை டீன் கல்யாணசுந்தரம் கூறியதாவது: ஒரு சில மாணவர்கள் ஆங்கில வழியில் அரசு கல்லுாரிகளில் கிடைத்த இடங்களை விடுத்து தமிழ் வழிக்கல்வியை தேர்வு செய்தனர். தமிழ் வழியில் கற்கும்போது எளிமையாக இருப்பது காரணம். அவர்கள் கற்ற கல்வி, வேளாண் வளர்ச்சி கிராமங்களை சென்றடைவதற்கு இது உறுதுணையாக இருக்கும்.
எளிய முறையில் கற்க, பாட புத்தகங்களை தமிழில் தயாரித்துள்ளோம். தமிழ் மீது ஆர்வம் உள்ள பேராசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் அரசு பணியில் சேர்வதற்கு, தனி ஒதுக்கீடு இருப்பதால் மாணவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க
என்ன கேட்டாலும் உடனே பதில் அளிக்கும் அசாத்திய திறமை வாய்ந்த குழந்தை!
Share your comments