1. செய்திகள்

இயற்கை முறையிலான மாற்று எரிசக்தி உற்பத்திக்கு மானியம் தேவை!

R. Balakrishnan
R. Balakrishnan
Natural alternative energy production

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்று எரிசக்தி உற்பத்தியை தயாரிக்கிறது விவேகானந்தா கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி. உயிரியல் எரிவாயு தொழில்நுட்பத்தை மக்களிடையே பரப்புவதில் பல தடைகள் இருக்கின்றன. உதாரணமாக, அதற்கு நிறைய மாட்டுச்சாணம் (Cow dung) தேவைப்படும். பெரும்பாலான சிறு விவசாயிகளிடம் கூட, எரிவாயு கலனில் போடும் அளவுக்கு சாணம் கிடைப்பதில்லை.

எல்லா வீடுகளிலும், சமையலறை கழிவுகள் அதிகமாக தேக்கமடைகின்றன. அந்தக் கழிவுகளை கையாள்வது சவாலாக இருக்கிறது. உற்பத்தியை விட கழிவுகளை மேலாண்மை செய்வது தான் கடினமான வேலை. நாங்கள் அந்தக் கழிவுகளை, மீத்தேன் எரிவாயுவாக மாற்றுகிறோம். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த சாண எரிவாயுக் கலனுடைய மேம்படுத்தப்பட்ட வடிவம் தான், எங்களின் 'சக்தி சுரபி' கலன் என்கிறார் இதன் திட்ட இயக்குனர் ராமகிருஷ்ணன்.

சமையலறை காய்கறிக் கழிவுகள்: (Kitchen Vegetable Waste)

சமையலறை காய்கறிக் கழிவுகளை எரிவாயுவாக மாற்றுவதோடு, அந்தக் கழிவுகளை செடிகளுக்கு உரமாகவும் (Compost) மாற்றலாம். கழிவுகளை உள்ளே போட குழாய், செரிப்பான், வாயு கொள்கலன், உரத்திற்கான கழிவுப்பாதை ஆகியவற்றை உள்ளடக்கியது தான் சக்தி சுரபி கலன். 1 கன மீட்டர் வாயுவை உற்பத்தி செய்வதற்கான கலன் அமைக்க, 25 ஆயிரத்து 500 ரூபாய் செலவாகிறது.

மானியம் (Subsidy)

நிலைத்த கலன் அமைக்க, மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தி துறை, 8,000 ரூபாய் மானியம் கொடுக்கிறது. நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு, இந்த கலன் போதும். 1 கன மீட்டர் முதல், 100 கன மீட்டர் வரை வாயு உற்பத்தியாகும் அளவுக்கு கூட, இதை பெரிதாக வடிவமைக்கலாம். பெரிய உணவு விடுதிகள், பள்ளி, கல்லுாரி மாணவர் விடுதிகள், காப்பகங்கள் மாதிரியான இடங்களில் இதை அமைத்திருக்கின்றனர்.

மின்சார உற்பத்தி (Electricity Generation)

இதே எரிவாயுவை பயன்படுத்தி, மின்சார உற்பத்தியும் செய்யலாம். மின்சார உற்பத்திக்கான டீசல் ஜெனரேட்டரில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம், இந்த வாயுவைப் பயன்படுத்தி அதை இயக்க முடியும்; மின்சாரம் கிடைத்து விடும்.

சாண எரிவாயு, சமையலறை கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரிப்பு மாதிரியான மாற்று எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க, மத்திய அரசு மானியம் (Subsidy) கொடுப்பது போல், கர்நாடகா, கேரளா அரசுகளும் மானியம் கொடுக்கின்றன. தமிழகத்தில், இதற்கு மானியம் கொடுப்பதில்லை. மானியம் கிடைத்தால், நிறைய பேர் மாற்று எரிசக்தி உற்பத்திக்கு மாறுவர்.

மேலும் படிக்க

உலக மண் தினம்: மண்வளம் காக்க உறுதி எடுப்போம்!

யானை மனித மோதலைத் தடுக்கும் தேனீக்கள்: புதிய திட்டம் அமல்!

English Summary: Subsidy needed for natural alternative energy production! Published on: 06 December 2021, 07:24 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.