திருவள்ளுர் மாவட்டத்தில் பால் பதப்படுத்தும் சிறு நிறுவனத்தை தொடங்குபவர்கள், ஏற்கனவே உள்ள சிறு நிறுவனத்தை மேம்படுத்த ₹10 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
பால் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு மானியம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரால் 2020-21ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஆத்ம நிர்பார் பாரத் அபியான் (Aatmanirbhar Bharat Abhiyaan) திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பாரத பிரதமர் உணவுபதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 2020-21ம் ஆண்டு முதல் 2024-25 வரை ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்தலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளை பெருள்
ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையின்கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தனிநபா் அடிப்படையில் ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தருதல், வா்த்தக முத்திரை, சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பப் பயிற்சிகள் ஆகியவற்றுக்கு நிதியுதவி செய்யப்படும்.
மேலும் படிக்க...
ரசாயன கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றம் - விவசாயிகள் கவலை
பெருந்தொற்று காலத்திலும் அதிக நிலப்பரப்பில் விளைச்சல் - வேளாண் துறை
Share your comments