தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்க தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்றும் பயன்பெற வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2018-2023 எனும் புதிய கொள்கையை 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மானியம் வழங்குவது முக்கிய நோக்கம் ஆகும். அந்த அடிப்படையில் 2021-ம் ஆண்டு புதிதாக தொழில் தொடங்கும் 10 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது.
எனவே, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ரூ.10 லட்சம் மானியத்தை பெற வருகிற 25-ந் தேதிக்குள் http://startuptn.in/forms/tanseed/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க...
காளான் உற்பத்தியில் வெற்றி கண்ட சரவணன்! இளைஞர்களுக்கும் வழிகாட்டுகிறார்
ஆன்லைனில் நர்சரி செடிகள் விற்கும் சக்திவேல்! மக்களிடையே அமோக வரவேற்பு
சத்துக்கள் குறையாமல் காய்கறிகளை விளைவிக்க இயற்கை விவசாயத்தால் மட்டுமே முடியும்!
Share your comments