தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்திருப்பது, வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது மாற்றம் காணப்படுவது முதலீட்டாளர்களை ஆறுதலடையச் செய்துள்ளது.
மின்னும் தங்கம்
தங்கம் என்ற இந்த உலோகம், பல வேளைகளில் நமக்கு பலவழிகளில் கைகொடுக்கும் உலோகம். ஆபரணமாக அணியும்போது தனி கவுரவத்தைக் கொடுக்கும் தங்கம், நிதி நெருக்கடி ஏற்படும்போதும் தவறாமல் கைகொடுக்கிறது. எனவே எப்போதுமே, தங்கம் முதலீட்டிற்கான உலோகமாகவும் பார்க்கப்படுகிறது.
கிடு கிடு உயர்வு
ஆனால் அண்மைகாலமாக சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் நிச்சயமற்றத்தன்மை காரணமாக, தங்கம் விலை ராக்கெட் வேகத்தை உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.45 ஆயிரத்தை நெருங்கியது திருமணம் உள்ளிட்ட வைபவங்களை வைத்திருப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
3 நாட்களில் சரிவு
இந்நிலையில், கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது. அதாவது ஒரு சவரன் தங்கம், ரூ.44,280-க்கும், ஒரு கிராம் தங்கம் 5,535க்கும் விற்பனை செய்யப்படுகிறது.முன்னதாக மார்ச் 31ம் தேதி ஒரு சவரன் தங்கம் 44,720 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 5,590க்கும் விற்பனையானது.
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு வித நம்பிக்கையையும், ஆறுதலையும் அளித்துள்ளது.
மேலும் படிக்க…
பெண்களுக்கு ரூ. 6000 வழங்கும் மத்திய அரசு!
சுட்டெரிக்கும் சூரியன்-கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்கும் வழிகள்!
Share your comments