கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு குறைந்து காணப்பட்ட நிலையில், சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
மேலும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. சென்னையின் ஒருசில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது, தற்போது, சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு பெய்து வருகிறது.
இதில் குறிப்பாக தண்டையார் பேட்டை, ராயபுரம், பாரிமுனை, அண்ணா சாலை, சேப்பாக்கம், வள்ளூவர் கோட்டம், கோடம்பாக்கம், அசோக் நகர், கிண்டி, அடையாறு உள்ளிட்ட சென்னை நகரின் முக்கியப் பகுதியில் மழை விட்டு விட்டு பொழிகிறது. இதேபோல் பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருவது குறிப்பிடதக்கது. மேலும், சென்னை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை காலையில் மழை பொழிவு உள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் மிதமான வேகத்தில் இயங்குவதால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. திடீர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.
இதேபோல் திருவாரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், அடியக்கமங்கலம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
PM-KMY: திட்டத்தின் கீழ், ஓய்வு ஊதியம் பெற எவ்வாறு பதிவு செய்வது?
Share your comments