1. செய்திகள்

தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி-சவரனுக்கு ரூ.800 குறைவு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Sudden fall in gold prices-Rs. 800 less for Sawaran!

சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ஒரு வாரத்தில் 800 ரூபாய் குறைந்திருப்பது, வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுவது சிறு ஆறுதலாக உள்ளது.

உக்ரைன்-ரஷ்யப் போர் தொடங்கியது முதலே தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிலவி வருகிறது. போர் 8 மாதங்களைக் கடந்துவிட்டநிலையில், போர் பதற்றம் காரணமாக, பெரும்பாலும் விலை அதிகரித்து வந்தது.

ரூ.800

இந்நிலையில் எதிர்பார்ப்புக்கு மாறாக, இன்று தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.அதாவது ஒரேநாளில் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது.

ரூ.25 சரிவு

இன்று கிராமுக்கு 25 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் தங்கம் 4,735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 37,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.நேற்று, ஒரு கிராம் தங்கம் 4,760 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருமண சீசன்

முன்னதாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அதாவது 7-ந்தேதி ஒரு சவரன் தங்கம், 38,680ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 4,835 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருமண சீசன் வர உள்ள நிலையில், தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, தங்க நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க...

செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!

ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!

English Summary: Sudden fall in gold prices-Rs. 800 less for Sawaran! Published on: 14 October 2022, 11:56 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.