1. செய்திகள்

திடீரென்று உயர்ந்த டிராக்டர் விற்பனை!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Tractor sales

விவசாய போராட்டத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக டெல்லிக்கு ட்ராக்டர்களில் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நன்றாக திட்டம் தீட்டியதன் மூலம் டிராக்டர்கள் விற்பனை வேகமாக உயர்ந்துள்ளது என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளபடி, பஞ்சாப் மாநிலம் இந்த மூன்று மாதங்களில் டிராக்டர்களின் விற்பனையில் மிகப்பெரிய அதிகரிப்பைக் பார்த்துள்ளது. டிராக்டர் விற்பனை டிசம்பர் 2020ல் 94.30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. டிசம்பர், 2019ல் 790 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டது, இரண்டையும் பார்த்தால் டிசம்பர் 2020ல் 1,535 டிராக்டர்கள் விற்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் குடியரசு தின வன்முறை சம்பவத்தில் ஆழ வேரூன்றியிருப்பது திட்டமிடப்பட்ட சதி என்ற குற்றச்சாட்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நவம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 மாதங்களுக்கு இடையில் டிராக்டர்கள் விற்பனை பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

அதே போல, ஜனவரி, 2020ல் 1,534 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் ஒப்பிடும்போது, ஜனவரி, 2021ல் 2,840 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டு 85.13 சதவீதம் டிராக்டர்கள் விற்பனை உயர்ந்துள்ளது. நவம்பர், 2019ல், 1,330 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் ஒப்பிடுகையில், நவம்பர், 2020ல் 1, 909 டிராக்கர்கள் விற்பனை செய்யப்பட்டு 43.53 சதவீதம் டிராக்டர் விற்பனை அதிகரித்துள்ளது என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மே மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையில், பல வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களை, போலீஸ் தடுப்புகளை உடைக்கும் வகையில் டிராக்டர்களை மாற்றி, ஹெவி மெட்டல் துணை பொருத்துவதற்கு தூண்டியதாக வீடியோ காட்சிகள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் குடியரசு தினத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்டவை என்று தெரிவிக்கப்படுகிறது.

விவசாய தலைவர்கள் டிராக்டர் பேரணியை அனுமதிக்கப்பட்ட வழியைப் பின்பற்றவில்லை என்று கூறும் வீடியோ காட்சிகளும் இருக்கின்றது. அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டால், அவர்கள் தடுப்பை உடைத்து டெல்லிக்குள்ளே நுழைவார்கள்” என்று இந்த குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.

இந்த குற்றப்பத்திரிகையில் நடிகர் தீப் சித்து போராட்டக்காரர்களிடம் உரையாற்றிய வீடியோ காட்சியையும் “விவசாயிகள் சங்கத்தின் மற்ற தலைவர்கள் செங்கோட்டையை அடைந்து பொறுப்பேற்க அழைப்பு விடுத்தார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்துவின் வழக்கறிஞர், அபிஷேக் குப்தா,கூறியதாவது “இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போலீசார் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. சதித்திட்டத்தின் பேரில் விவசாயிகள் டிராக்டர்களை வாங்கினார்கள் என்ற இந்த குற்றச்சாட்டு அபத்தமானது, குழந்தைத்தனமானது. அவர்கள் சட்டத்தை கேலி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க:

ஏறி இறங்கும் கொரோனாத் தொற்றால் சென்னையில் மீண்டும் கட்டுப்பாடுகள்!

weather: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை!

English Summary: Suddenly high tractor sales! Published on: 15 September 2021, 06:06 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.