கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதை அறிந்து அங்கு வந்த தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சர்க்கரை ஆலையின் பாதிப்புகள் குறித்தும், அதைத் தீர்க்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது ஆலை முன்பு குவிந்திருந்த கரும்பு விவசாயிகள் அமைச்சரை சந்தித்து, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டியும் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஆலை நிர்வாகிகள் கலந்து கொண்டு, கரும்பு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது :
திருத்தணி சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவைக்கு கொடுத்தவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை இந்த மாதத்தில் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், உடனடியாக பழுதடைந்த இயந் திரங்களை சீர் செய்து, மீண்டும் அரைவை அளவை உயர்த்த நட வடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கரும்பு விவசாயிகள் ஏக்கருக்கு 20 டன் அளவுக்குதான் கரும்பு உற்பத்தி செய்கின்றனர்.புதிய ரக கரும்பு வகைகளை ஏக்கருக்கு 40 முதல் டன் வரை உற்பத்தி செய்ய முடியும் என்பதால் விவசாயிகளுக்கு இதுகுறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
மேலும் படிக்க...
எந்தெந்த பயிர்களுக்கு திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தலாம்? பட்டியல் இதோ!
Share your comments