இந்தியாவில் தற்போது கோடை காலம் நிலவுவதால் வெப்பம் மக்களை சுட்டெரித்து வருகிறது. ஜூன் மாதம் வரை வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோடை வெப்பம் (Summer Heat)
இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் முதல் கோடை காலம் துவங்கும். இந்த காலகட்டத்தில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் நடப்பு ஆண்டு வெப்பநிலை கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகவே இருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், பெரும்பாலான பகுதிகளில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெப்ப நிலை அதிக அளவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக பீகார், குஜராத், உத்திரபிரதேஷ், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிக அளவு வெப்ப அலை வீசக்கூடும் என்றும் கூறுகின்றனர். மேலும் தெற்கு தீபகற்பம் மற்றும் வடமேற்கு இந்தியாவை தவிர்த்து மற்ற இடங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்கின்றனர்.
நடப்பு மாதம் கொளுத்தும் வெயிலே மக்களால் தாங்க முடியவில்லை. இந்த நிலையில் வரும் நாட்களில் இன்னும் வெப்பநிலை அதிகரித்தால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகுவார்கள். ஏற்கனவே இந்த ஆண்டு குளிரின் அளவும் கடந்த ஆண்டுகளை விட அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
தங்க நகை வாங்கும் போது இதைப் பார்த்து வாங்குங்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
Share your comments