1. செய்திகள்

கூகுள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: மென்பொறியாளர்களே அலர்ட்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Super Chance to Work at Google: Software Engineers Alert!

Google recruitment 2022 for software engineers: கூகுள் நிறுவனத்தில் மென்பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படித்த பெரும்பாலானோரின் கனவு கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்பதாகும். அத்தகைய கனவை நனவாக்க அரிய வாய்ப்பு வந்துள்ளது. உடனே அப்ளை செய்யுங்கள்.

வாழ்வில் அதிகபட்ச விலை கொடுத்தாலும் கிடைக்காதது தவற விட்ட வாய்ப்பாகும், எனவே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.

இணையத்தை பயன்படுத்த மக்கள் தொடங்கிய முதல், பெரும் அளவு பயன்படுத்தப்பட்ட அனைவருக்கும் கூகுள் என்பது என்ன என தெரியும். அத்தகைய மிகவும் பிரபலமான, உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தில் மென்பொறியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பொறியியல் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்கள் இந்தியாவில் உள்ள கூகுள் அலுவலகங்களில் நிரப்பப்பட உள்ளன.

பதவி விவரம்: மென்பொறியாளர் (Software Engineer)

கல்வித் தகுதி: 2019/2020/2021 ஆகிய ஆண்டுகளில் B.E/B.Tech/M.E/M.Tech முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.

பணியிடம் விவரம்: ஹைதராபாத் மற்றும் பெங்களூரு

அனுபவம் விவரம்: 0-1 வருடம் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

பொறியியல் டிகிரிகளில் சாப்ட்வேர் படிப்பை தேர்வு செய்து படித்தவர்கள், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். C, C++, JAVA, Linux, Python, OS, Machine Learning போன்ற பல சாப்ட்வேர் விவரங்கள் தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://careers.google.com/jobs/results/132239628489892550-software-engineer-university-graduate-2022-start/ என்ற ஆதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும் படிக்க:

25 கோடி வரை லாபம் தரும் கிழங்கு வகை!

மழைக் காலத்திற்கு ஏற்ப பாத பராமரிப்பு - நோய்களையும் தவிர்த்திடலாம்!

English Summary: Super Chance to Work at Google: Software Engineers Alert! Published on: 14 April 2022, 11:56 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.