கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் முழு முடக்கத்தை அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் (Supreme Court) பரிந்துரைத்துள்ளது. நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ள நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை (Oxygen Shortage) உயிரிழப்புக்கு மற்றுமொரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
முழு ஊரடங்கு
ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாமாக முன்வந்து, உச்ச நீதிமன்றம் அதை வழக்காக பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில், நீதிபதிகள், டி.ஒய். சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், கொரோனா வைரஸ், மேலும் பரவுவதை தடுக்க எடுத்துள்ள மற்றும் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும்.
தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ள, மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கலாம். தேவைப்பட்டால், முழு முடக்கத்தை (Full Lockdown) மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தலாம். அதே நேரத்தில், ஏழை, எளிய மக்களின் பொருளாதார சூழ்நிலையையும் கவனிக்க வேண்டும். முழு முடக்கத்தை அறிவிப்பதற்கு முன், அவர்களுக்கு தேவையான வசதிகள், வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனறு கூறப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு
மத்திய அரசு, மாநிலங்களுடன் இணைந்து, அவசர பயன்பாட்டிற்கு, உபரியான ஆக்சிஜன் சிலிண்டர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கொரோனா சிகிச்சை தொடர்பாக தாமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலை, தேசிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதில் இருந்து மக்களை காக்க வேண்டிய இமாலய பொறுப்பு, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்குள், அவசர கால பயன்பாட்டிற்கு என, உபரியாக ஆக்சிஜன் சிலிண்டர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க
சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!
கால்நடைகளில் கோமாரி நோய் வராமல் தடுப்பது எப்படி?
Share your comments