இந்திய முழுவதும் 14 கோடி விவசாயிகள் இருப்பதாக கடந்த ஆண்டு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 50% பேருக்கு வேலை வழங்குவது விவசாயமே. ஆனால் இன்றைய நிலையில் விவசாயமா! என்று முகம் சுளிக்கும் நிலைக்கு விவசாயம் இருக்கிறது.
கடத்த ஆண்டு மஹாராஷ்டிராவில் மட்டும் 12,021 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த வாரம் மாநிலங்களவையில் வேளாண் அமைச்சர் நரேந்திர சின் தோமர் பேசுகையில் விவசாயிகளுக்கு இதுவரை 12,305 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ 6,000 என்று கடந்த பிப்ரவரியில் துவங்கப்பட்டது.
ஆனால் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் 59% விவசாய மக்களுக்கு அரசு வழங்கும் இக்கடன் திட்டத்தை பற்றியே தெரியாதது தான். அதோடு ஆய்வறிக்கையில் வெளியாகி உள்ள மற்றொரு அதிர்ச்சிகாரமான விஷயம் விவசாய குடும்பத்தை சேர்ந்த அடுத்த தலைமுறைகளில் 49% பேர் விவசாயத்தை தொடர விரும்ப வில்லை என்பது.
ஏறக்குறைய 43% விவசாய மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்றும் மற்றும் இது ஒரு சில மாநிலங்களில் மனக்குமுறல் மட்டுமன்றி ஏறக்குறைய 19 மாநிலங்களின் நிலைமையும் இதுதான். மிகக்குறிப்பாக உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் விவசாயிகளின் நிலை படும் மோசமாக உள்ளது என்று ஆய்வறிக்கை மூலம் தெரிந்துள்ளது.
தற்கொலைக்கு காரணம்
அரசாங்கம் விவசாயிகளுக்கு பல்வேறு கடன் வசதிகள், வட்டித் சலுகைகள் என அறிவித்திருந்தாலும் அவை இன்னும் பல விவசாயிகளுக்கு சென்றடையவில்லை என்றால் என்ன பயன்?
தற்கொலைக்கு காரணம் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் பெற்று வட்டியும், அசலும் செலுத்த முடியாமல் கடன் கொடுத்தவர்களின் கொடுமை தாங்க முடியாமல், அரசு சலுகைகள் பற்றியும் தெரியாமல் தங்கள் குடும்பத்திற்கு ஒரு வேளை உணவு கூட அளிக்க முடியம் மனஅழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
சினிமா, விளையாட்டு, பொழுது போக்கு, போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டும் நாம் ஏன் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு மட்டும் உதவ முன்வருவதில்லை, அதற்காக போராடவும் முன்வருவதில்லை. இந்நிலை எப்போது மாறும்?
ஊடகங்கள் எதை எதையோ விளம்பரம் படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் வேளாண்மை சார்ந்த செய்திகள், அரசாங்க அறிவிப்புகளான ஊக்கத்தொகை, உதவித்தொகை போன்ற விஷயங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் அவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது ஊடகங்களாகிய நமது கடமை.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments