இன்று முதல் ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்கப்படும் திட்டம் முதல்வரால் துவங்கப்பட்டது. கற்பகம் பிராண்ட் சுத்தமான பனை வெல்லம் இன்று முதல் நியாயவிலை கடைகளில் கிடைக்கும். இந்த திட்டம் குறித்து வேளான் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பனை வெல்லம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மருத்துவக் குணங்கள் அதிகம் உள்ள பனை வெல்லம் இனி ரேஷன் கடைகளில் கிடைத்தால், அது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் (Ration Shops) 100 கிராம், 250 கிராம், 500 கிராம், மற்றும் ஒரு கிலோ என்ற வகையில் பனை வெல்லம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர தீபாவளி பண்டிகையை தொடர்ந்து கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கும் வகையில் தீபாவளிக்கு தமிழ்த்தறி பட்டுப்புடவையையும் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல் முறையாக ரேஷன் கடைகளில் கற்பகம் பிராண்ட் பனை வெல்லம் விற்பனை திட்டத்தை மு.க. ஸ்டாலின் (MK Stalin) துவக்கி வைத்துள்ளார்.
மேலும், காதிகிராப்ட் பொருட்களை விற்பனை செய்யும் டி.என்.காதி (tnkhadi) என்ற செயலி ஒன்றையும் முதல்வர் இன்று துவக்கிவைத்தார். சுமார் ரூ.65 லட்சம் செலவில் சாயல்குடியில் அமைக்கப்பட்டுள்ள பனை பொருள் பயிற்சி மையத்தையும் முதல்வர் இன்று துவக்கி வைத்துள்ளார்.
இதற்கிடையில், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை அடுத்து, நவம்பர் மாதத்தில், 1 - 3 ஆம் தேதி வரை, காலை 8 மணி முதல் இரவு 7 மணி அரை ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு (TN Government) உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது மக்களின் வசதிக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments