1. செய்திகள்

சைலண்ட் ஜெனரேட்டர்- தமிழகத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்யும் TAFE

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
TAFE invest Rs 500 crore in Global Investors Meet

கடந்த ஜனவரி 7, 8 ஆகிய இரு தேதிகளில், சென்னை வர்த்தக மையத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் டிராக்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் TAFE நிறுவனம் ₹500 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டு தினங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 6,64,180 கோடி ரூபாய், அளவிலான முதலீடுகள், 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உள்ளிட்ட மொத்தம் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

எந்தெந்த துறைகளில் முதலீடு பெறப்பட்டுள்ளது?

குறிப்பாக மேம்பட்ட மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், மோட்டார் வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டது.

இவை தவிர, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் தங்கள் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன. மூலதனங்கள் நிறைந்த (Capital intensive) மற்றும் அதிக அளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கும் (Employment intensive) துறைகளில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

TAFE நிறுவனம் ₹500 கோடி முதலீடு:

டிராக்டர்கள் மற்றும் விவசாய உபகரண உற்பத்தியாளர் நிறுவனமான TAFE லிமிடெட் தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த முதலீடுகள் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தின் வேளாண உபகரணப் பிரிவை விரிவாக்கம் செய்வதற்கும், அதன் உற்பத்தி வசதியை மேம்படுத்துவதற்கும், 'சைலண்ட் ஜெனரேட்டர்'களை ஏற்றுமதி செய்வதற்கும் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAFE நிறுவன தலைவரும் நிர்வாக இயக்குனருமான மல்லிகா சீனிவாசன் பேசுகையில், "தமிழ்நாடு மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாகும்.  TAFE ஆனது தமிழ்நாட்டின் வலுவான சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது மற்றும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளில் முதலீடு செய்வதன் மூலம் தமிழ்நாடு அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் TAFE Ltd, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க சந்தைகளுக்கு 'சைலன்ட் ஜெனரேட்டர்'களை அசெம்பிளி செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் அதன் வசதியை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது. மேலும், மாநிலத்தில் அதிநவீன வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதியை அமைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Read also: தலைநகருக்கு தொடர் எச்சரிக்கை- கனமழை பெய்யும் மற்ற மாவட்டங்களின் விவரம்!

அதிகமாக முதலீடு செய்த நிறுவனங்களின் பட்டியல்:

இம்மாநாட்டின் முக்கிய முதலீட்டாளர்களாக டாடா பவர் நிறுவனம் (70,800 கோடி ரூபாய்), செம்ப்கார்ப் நிறுவனம் (37,538 கோடி ரூபாய்), அதானி குழுமம் (42,768 கோடி ரூபாய்), வின்ஃபாஸ்ட் நிறுவனம் (16,000 கோடி ரூபாய்), டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (12,082 கோடி ரூபாய்).

JSW நிறுவனம் (12,000 கோடி ரூபாய்), ஹுண்டாய் நிறுவனம் (6,180 கோடி ரூபாய்), TVS நிறுவனம் (5,000 கோடி ரூபாய்), பெசுட்ரான் நிறுவனம் (1,000 கோடி ரூபாய்) மற்றும் செயிண்ட் கோபைன் (3,400 கோடி ரூபாய்) போன்ற குறிப்பிட்டத்தக்க நிறுவனங்களின் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read also:

Bus Strike: கோயம்பேடுக்கு விசிட் அடித்த அமைச்சர்- அரசின் முடிவு என்ன?

பயத்தை காட்டும் மக்காச்சோளம்- இறக்குமதி வரி குறித்து AIPBA அரசுக்கு கடிதம்

English Summary: TAFE Silent Generator to invest Rs 500 crore in Tamil Nadu Global Investors Meet Published on: 09 January 2024, 03:31 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.