தமிழகத்தில் காலியாக உள்ள நான்கு சட்ட மன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்கு பதிவு நடந்தது. சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடை தேர்தலானது நடந்தது.
கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 13 தொகுதிளுக்கும் மறு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
நேற்று நடை பெற்ற வாக்குப்பதிவில் சூலூர்(79.41%), அரவக்குறிச்சி(84.28%), திருப்பரங்குன்றம்(74.17%), ஒட்டப்பிடாரம் (72.61%) என்ற கணக்கில் வாக்குகள் பதிவாகின. அதிக பட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 84.28% % வாக்குகள் பதிவாகியிருந்தன.
தேர்தல் பணிகளுக்காக 5508 அதிகாரிகள் நியமிக்க பட்டிருந்தனர். பாதுகாப்பு பணிக்காக 15 ஆயிரத்திற்கும் அதிகமான காவல் துறையினர் ஈடு படுத்த பட்டிருந்தனர். மத்திய பாதுகாப்பு படையினர் 1300 பேர் பணியில் இருந்தனர்.
தமிழகத்தை பொறுத்தவரை கருணாநிதி மற்றும் ஜெயலலிதா எனும் இரு பெரும் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லாமல் நடை பெறும் தேர்தல். எனவே தி மு க மற்றும் அ தி மு க தங்களது பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
ஆளும் கட்சியில் நிலவி வரும் உட்கட்சி பூசல்கள், தினகரன் போன்றவர்களின் வரவால் கட்சி வலுவிழந்து உள்ளது. இம்முறை கமலஹாசன் அவர்கள் முதல் முறையாக தேர்தலை எதிர் கொள்கிறார்கள். ஆனால் வெளிவரும் கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தி மு க விற்கு சாதகமாக உள்ளது. என்றாலும் மே 23 ஆம் தேதி வரை காத்திருப்போம்.
Anitha Jegadeesan
Share your comments