1. செய்திகள்

தமிழகம்: 5ம் வகுப்பு கல்வி போதும், கிராம உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Tamil Nadu: 5th standard education is enough, apply for village assistant job

சென்னை மாவட்ட வருவாய் அலகில் 9 வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன, மேலும் மாவட்டம் வாரியாக பல மாவட்டங்களில், இந்த வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 5ம் வகுப்பு கல்வித் தகுதி போதுமானது. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? ...

சம்பளம்: Special Time Scales of pay Matrix Level 6 (Minimum Rs.11,100- Maximum Rs.35,100) என்ற அடிப்படையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது.

வயது வரம்பு: இந்த கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30 செப்டம்பர் 2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தால் விண்ண்பிக்க தகுதியுடையவர் ஆகின்றனர்.

தேர்வு செய்யப்படும் முறை: வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். பின்னர், எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடதக்கது.

இதர நிபந்தனைகள் Application for Village Assistant:

விண்ணப்பிக்கும் சென்னை மாவட்ட வருவாய் வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் குறைந்த பட்ச கல்வித்தகுதியாக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானதாகும்.

கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? (How to Apply for Village Assistant Vacancies?)

தமிழக அரசின் https://www.tn.gov.in, வருவாய் நிர்வாகத் துறையின் இணையதளம் (https://cra.tn.gov.in) மற்றும் சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வமான இணையதளத்தின் (https://chennai.nic.in) மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்ததாக தனது மாவட்டத்தில் கிராம உதவியாளர் ஆகும் வாய்ப்பையும் தவறவீடாதீர்கள். எனவே கிராம வாரியாக விண்ணப்பிக்க தமிழக அரசின் ஆதிகாரப்பூரவ இணையதளத்தில்,

கீழே இடதுப்புறம் Grievances Redressal என்றதன் கீழ் மாவட்ட முக்கிய அலுவலகங்கள் என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும். புதிதாக திறக்கும் பக்கத்தில் மாவட்டங்களின் பெயர் பட்டியல் தோன்றும், அதில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யும்போது அதில் கொடுக்கப்பட்டுள்ள கிராம உதவியாளர் பணிக்கான அறிவிப்பை முகப்பு பக்கத்திலேயே பார்க்கலாம். மேலும் உங்கள் மாவட்டத்தின் பக்கம் திறக்கவில்லை, அவ்வாறு இருப்பின் சென்னையின் முகப்பை பயன்படுத்தியும் பதிவு செய்யலாம். அதே நேரம் உங்கள் கிராமத்தில், இவ்வேலைவாய்ப்பு இல்லை என்றால் அருகில் உள்ள கிராமத்திற்கான வேலைவாய்ப்பிற்காகும். நீங்கள் பதிவு செய்யலாம்.

(குறிப்பு: இந்த வேலைவாய்ப்பிற்கு சைக்கிள், இரு சக்கரவண்டியோ அல்லது நான்கு சக்கர வண்டியோ ஒட்ட அறிந்திருத்தல் அவசியமாகும்)

விண்ணப்பத்திற்கான முக்கிய தேதிகள்:

நவம்பர் மாதம் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த வேலைவாய்ப்பு சென்னை மட்டுமின்ற தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இருப்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

TNAU: பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை, தொழில்முனைவோருக்கு அசத்தல் வாய்ப்பு

அக்.15 சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: விவரம் உள்ளே

English Summary: Tamil Nadu: 5th standard education is enough, apply for village assistant job Published on: 13 October 2022, 02:20 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.