க்ரிஷி ஜாக்ரனின் மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா(MFOI) விருது வழங்கும் நிகழ்விற்கு மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் தங்களது ஆதரவினை வழங்கியுள்ள நிலையில் புதிய உத்வேகம் பெற்றுள்ளது MFOI. விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI விருது வழங்கும் நிகழ்வு நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்காக கடந்த ஜூலை மாதம் டெல்லியிலுள்ள சாணக்யபுரியில் உள்ள தி அசோக் ஹோட்டலில் MFOI விருது வழங்கும் நிகழ்விற்கான கோப்பை மற்றும் இலட்சினை வெளியிடும் நிகழ்வு ஒன்றிய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது விருதுக்கு இந்தியா முழுவதும் இருந்து விவசாயிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் க்ரிஷி ஜாக்ரனின் முன்னெடுப்புக்கு இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற வேளாண் பல்கலைக்கழகங்கள் தங்களது ஆதரவினை வழங்கியுள்ளதை அடுத்து MFOI நிகழ்வு புதிய உத்வேகம் எடுத்துள்ளது.
க்ரிஷி ஜாக்ரனின் மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்வோடு கைக்கோர்த்துள்ள பல்கலைக் கழகங்கள் விவரம் பின்வருமாறு- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவிந்த் பல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், டாக்டர் ஒய்.எஸ்.ஆர். வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலை பல்கலைக்கழகம், மத்திய மீன்வளக் கல்வி நிறுவனம், கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுகள் பல்கலைக்கழகம், பீகார் வேளாண் பல்கலைக்கழகம்.
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், ராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகம், டாக்டர் யஷ்வந்த் சிங் பர்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகம், கர்நாடக கால்நடை, விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம், பேராசிரியர் ஜெயசங்கர் தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகம், ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்.
MFOI விருதிற்கான நிகழ்வை இணைந்து வழங்குவோர் NSAI, ((இந்திய தேசிய விதை சங்கம்), Crop Life India, மற்றும் ACFI, Agro Chem Association of India. MFOI விருதிற்கான ஊடகத்தொடர்பு டிராக்டர் நியூஸ் மற்றும் அக்ரிகல்ச்சர் வேர்ல்ட் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, விருது விழாவில் கெளரவ விருந்தினராக கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளார்.
MFOI விருது வழங்கும் நோக்கத்தின் மூளையாக விளங்கும் க்ரிஷி ஜாக்ரன் ஊடகத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை ஆசிரியருமான எம்.சி. டொமினிக், நாட்டிற்கு உணவளிக்கும் அந்த ‘கௌரவமான கரங்களை’ அங்கீகரிக்கும் வகையில் இந்த முன்னெடுப்பினை மேற்கொண்டுள்ளார்.
வருகிற டிசம்பர் மாதம் 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் டெல்லியில் வைத்து MFOI விருது வழங்கும் விழா நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
MFOI விருதுக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கினை தொடரவும்.
மேலும் காண்க:
Share your comments