தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் பத்தாம் வகுப்பும் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் அளித்திருந்த கைபேசி எண்ணிற்கு குறுஞ்சசெய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும் மாணவர்களின் வசதிக்காக ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தகவல் மையங்களிலும், அரசு நூலகங்களிலும் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமசீர் கல்வி என்னும் பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தொடங்கி 29 ஆம் தேர்வு வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்த 12,545 பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். 9.5 மாணவர்கள் பள்ளிகளின் மூலமும், 35 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனித்தேர்வகவும் எழுதியுள்ளனர். இதில், மாணவர்கள் 93.3 சதவீதம் தேர்ச்சி, மாணவிகள் 97% தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொது தேர்விலும் திருப்பூர் மாவட்டம் முதலிடம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.
மே 6 ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in இணையதளம் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Share your comments