இன்று முதல் ஜூன் 3ஆம் தேதி வரையான வானிலை முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த முன்று மணி நேரத்திற்குள் 14 மாவட்டகளில் மழைக்கு வாய்ப்பு. எந்தெந்த மாவட்டம், கீழே பதிவில் காணுங்கள்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை வலுத்து வருவதால் 14 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூரில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதேநேரம் மேற்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவில் சூறாவளி காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட 24 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் கொள்முதல் நிறுத்தம்...
தமிழகம் : குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ. 50 நிர்ணயம்....
ஜூன் 1 தொடங்கி 3 ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை காரைக்காலில் மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:
ABHA : மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட Health Card! எப்படி பெறுவது?
UPSC CSE 2021 Result: தமிழகத்தில் முதலிடம் பிடித்து கோவை மாணவி சாதனை!
Share your comments