Tamil Nadu Chief Minister Stalin confirmed with Corona!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
முதல்வருக்கு கொரோனா (Corona to the Chief Minister)
கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், இரு டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளார். இதனிடையே ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழகத்தின் பல தலைவர்கள் கூறியுள்ளனர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலினுக்கு கோவிட் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டி கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.
மேலும் படிக்க
Share your comments