கொரோனா (Corona) தொற்று நோய், வெட்டுக்கிளி (Locust) அட்டகாசம் போன்ற காரனங்களால் வட மாவட்டங்களில் பருப்பு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பருப்பு சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி காலம் தற்போது துவங்கியுள்ளது. இந்த பருவத்தில் சுமார் 3.5 லட்சம் ஏக்கரில், நெல் சாகுபடிக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நெல் மட்டுமின்றி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானிய வகைகள் போன்ற சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பருப்ப சாகுபடி பாதிப்பு
இந்தியாவின் வட மாநிலங்களில் அதிக அளவிலான பருப்பு வகைகள் சாகுபடி செய்யப்பட்டு பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், உத்திர பிரதேசம் , குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பருப்பு சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க வட மாநிலங்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்ததால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் முற்றிலும் நாசமாகின.இதனால் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டு, பருப்பு உற்பத்தி குறையும் சூழல் உருவாகியுள்ளது இதனை சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றது.
2 லட்சம் ஏக்கரில் பருப்பு சாகுபடிக்கு இலக்கு
இந்நிலையில், தமிழகத்தில் நடப்பு பருவத்தில் உளுந்து, துவரை உள்ளிட்ட பருப்பு வகைகளில் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சுமார் 2 லட்சம் ஏக்கரில் பருப்பு சாகுபடிக்கு தமிழக வேளாண் துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதற்கு தேவையான விதைகள், உரங்களை, விவசாயிகளுக்கு வழங்கவும், மாவட்ட இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேவையுள்ள விவசாயிகள், வேளாண்துறை அலுவலர்களை அணுகி விளைச்சலை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
TN Govt: வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க தடை!
விவசாயிகளுக்கு உதவும் வகையில், ரூ.71.21 கோடிக்கு வட்டியில்லா பயிர் கடன் : வேளாண்மை இயக்குனர்!
Share your comments