1. செய்திகள்

தமிழக மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக புதிய முயற்சி

KJ Staff
KJ Staff
Learning Through Visual

கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்பாடுத்துவதற்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி என்னும் தனி சேனலை ஒளிபரப்ப உள்ளது.  சென்னையில் இன்று காலை 9 மணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இதனை தொடங்கி வைத்துள்ளார்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வி இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பட்டுள்ளது. இதில் இன்று தொடங்க உள்ள கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி மாலை 3 மணி முதல் 4 மணிவரை கல்வி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்படும். இதனை அனைத்து பள்ளிகளிலும் ப்ரொஜெக்டர்களை ஏற்பாடு செய்து பள்ளி வளாகத்தில் குழந்தைகள் அனைவரும் காண ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

TN Educational Department

கல்வி தொலைக்காட்சியின் சிறப்பம்சம்

கல்விக்கென்று பிரத்தேகியமாக உருவான முதல் தமிழ் தொலைக்காட்சி. தனது சேவையை 24x7 வழங்க உள்ளது. இந்த தொலைக்காட்சியானது மாணவர்களுக்கு கற்றலை எளிமையாக்கும். மேலும் மாணவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கல்வி உதவித் தொகை பெறுவது பற்றிய விளக்கங்கள், விண்ணப்பிக்கும் முறை, நுழைவுத் தேர்வு பற்றிய விவரங்கள், புதிய முறையில் கற்றலையும், கற்பித்தலையும், கையாளும்  ஆசிரியர்களின் நேர்காணல், மாணவர்களின் அரிய கண்டு பிடிப்புகள், புதிய முயற்சிகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல்கள், போட்டி தேர்வுகளை எதிர்கொள்தல் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகள், சுய தொழில் தொடங்குவது தொடர்பான செய்திகள் போன்றவற்றை உள்ளிட்ட பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தமிழக கல்வித் துறை அறிவித்துள்ளது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Tamil Nadu Education Board Has Launched 24x7 Educational Channels Today Published on: 26 August 2019, 11:23 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.