அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமாரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விரகனுர் அணை (மதுரை), மதுரை ஐஎஸ்ஆர்ஓ (மதுரை) ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ, மதுரை விமானநிலையம் (மதுரை) 8 செ.மீ, திருமங்கலம் (மதுரை), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), வத்திராயிருப்பு (விருதுநகர்), மதுரை தெற்கு (மதுரை) தலா 7 செ.மீ, விளாத்திகுளம் (தூத்துக்குடி), கோவில்பட்டி (தூத்துக்குடி) தலா 5 செ.மீ, கோவில்பட்டி (தூத்துக்குடி), சாத்தூர் (விருதுநகர்) தலா 4 செ.மீ, பிளவக்கல் (விருதுநகர்), சோழவந்தான் (மதுரை), எட்டயபுரம் (தூத்துக்குடி), சித்தாம்பட்டி (மதுரை ) தலா 3 செ.மீ சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
PM Kisan : உங்க அக்கவுண்ட்ல எவ்வளோ இருக்கு? இத பண்ணுங்க தெரிஞ்சிக்கலாம்!
தமிழகத்தில் 59 அணைகள் உட்பட 736 அணைகள் புனரமைப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
தீபாவளி நற்செய்தி : ஜன் தன் வங்கி கணக்கில் மீண்டும் ரூ.1500 செலுத்த மத்திய அரசு முடிவு!
Share your comments