மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 18-ந்தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்படபோவதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
டெல்லியில் தொடரும் போராட்டம்
மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கிப் பேரணியாக வந்து 19 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வுகால வருமானத்தைப் பெற மிகச் சிறந்த 5 முதலீட்டு திட்டங்கள்.!
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி. ஆர் பாண்டியன் பேசுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பல கோடி விவசாயிகள் டெல்லியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டிய மத்திய அரசு உண்மைக்குப் புறம்பான செய்திகளைச் சொல்லி அவதூறு பிரச்சாரங்கள் செய்து விவசாயிகளின் போராட்டத்தைப் பிளவுபடுத்த முயல்வது கண்டிக்கத்தக்கது என்றார்.
மத்திய அமைச்சருக்கு கண்டனம்
விவசாயிகள் போர்வையில் போராட்டக் களத்தில் நக்சலைட்களும், தீவிரவாதிகளும் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார். இதனை அவர் திரும்பப் பெற வேண்டும். நியாயமான கோரிக்கையை ஏற்று சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கு பிரதமர் உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியது! - டெல்லியில் குவிந்த விவசாயிகள்!
தமிழகத்தில் எதிரொலிக்கும் போராட்டம்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. போராட்டக் குழுவின் அறைகூவலுக்கு இணங்க தமிழ்நாட்டிலும் சுங்கச் சாவடிகளைத் தடுத்து நிறுத்துவது, ரயில் நிலையங்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை முற்றுகை
இதன் ஒரு பகுதியாக வரும் டிசம்பர் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க "ஆர்கானிக் நீல்கிரீஸ்" - புதிய செயலி அறிமுகம்!!
Share your comments