1. செய்திகள்

புதிய அணை கட்டிப்புயலைக் கிளப்பிய கர்நாடக அரசு - வேதனையில் தமிழக விவசாயிகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Government of Karnataka launches new dam storm -

தென்பெண்ணை ஆற்றில், கர்நாடக பாஜக அரசு 10 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் அளவிற்கு அணையை கட்டியுள்ளதால், தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆறு (Southern River)

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் மாவட்டங்கள் வழியாகச் சென்று வங்கக்கடலில் கலக்கிறது.

பல ஏக்கரில் விவசாயம் (Agriculture on several acres)

இதனை நம்பி தமிழகத்தின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால் தென்பெண்ணை ஆற்றின் நீரை கர்நாடக மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு திருப்பிவிட அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

அணை கட்ட முயற்சி (Try to build the dam)

இதன் ஒருபகுதியாக தென்பெண்ணையாற்றின் முக்கிய நீராதாரமாக விளங்கும் துணை நதியான மார்க்கண்டேய நதியில் புதிய அணை கட்டும் முயற்சிகளை முடுக்கிவிட்டது

தமிழகம் எதிர்ப்பு (Tamil Nadu protest)

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது சம்பந்தமாக 2020-ம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையின்போதும் அதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொரோனாவால் நிறுத்தம் (Stop by Corona)

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு மற்றும் தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக இந்த விவரம் பற்றி பேசப்படவில்லை.

சத்தமின்றி சதி (Noiseless plot)

ஆனால் இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தக் கர்நாடக அரசு, சத்தமின்றி இந்த சதியை அரங்கேற்றியது.

அதிரடியாகத் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கேப்புதிய அணையை கட்டி முடித்து விட்டது.

யார்கோள் (Someone)

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சிக்குப்பம் கிராமத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதியான யார்கோள் என்ற இடத்தில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த அணை விரைவாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

அரசின் சதிவேலை (The conspiracy of the state)

ஒருபுறம் கொரோனா, மறுபுறம் தமிழக சட்டமன்றத் தேர்தல், இவை இரண்டையும் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்ட கர்நாடக அரசு, பத்தே மாதங்களில் 430 மீட்டர் நீளமும், 50 மீட்டர் உயரமும் (162 அடி உயரம்) கொண்ட ஒரு பெரிய தடுப்பனையை காட்டுபகுதியில் கட்டி முடித்தது.

மதகுகள் இல்லை (In the sluices)

இந்த அணைக்கு மதகுகள் கூட வைக்கப்படவில்லை. 162 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கும் அளவிற்கு இந்த அணைக் கட்டப்பட்டுள்ளது.

தண்ணீர் கிடைக்காது (Water is not available)

மத்திய நீர்பாசனத்துறை தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் கடலில் கலப்பதால், பாலாறு- தென்பெண்ணை இணைக்கும் திட்டத்தை அறிவித்தார்கள். இந்த அணைக் கட்டப்பட்டதால் தென்பெண்ணைக்கே தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

12 மாவட்டம் (12 District)

இதனால் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களின் விவசாயம் பாதிக்கப்படும். மேலும், நீர் ஆதாரமும் பாதிக்கப்படும்.

குடிநீருக்கும் சிக்கல் (Problem with drinking water)

அத்துடன் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணைக்கும் இனித் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த அணையில் தேங்கும் தண்ணீரைத்தான் பெங்களூர் மற்றும் கோலார் மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லுவதற்கான பணிகளும் தற்போது நடந்து வருகிறது.

இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில பொதுச் செயலாளர் ஏ.சி. வெங்கடேசன் கூறியதாவது,

12 மாவட்ட மக்கள் (People of 12 districts)

மார்கண்டேய நதியின் குறுக்கே தற்போது கர்நாடக அரசு புதியதாக கட்டப்பட்டுள்ள அணையால், தமிழக மக்கள் குறிப்பாக அருகாமையில் உள்ள இந்த 12 மாவட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

நடவடிக்கை தேவை (Action required)

பாலாறு தென்பெண்ணை இணைப்பு திட்டம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலைகளை உடனடியாக தமிழக அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

Online Ration Card: இப்போது நீங்கள் வீட்டில் இருந்தே ரேஷன் கார்டைப் பெறலாம், இங்கே எளிதான வழியை அறிந்து கொள்ளுங்கள்

விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரே‌ஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!

English Summary: Tamil Nadu farmers in pain! Published on: 10 July 2021, 10:06 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.