கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் மாசுடைந்துள்ளதால் தமிழக விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கையினை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானிசாகர் ஆற்றில் 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் காலிங்கராயன் கால்வாயில் பாசனத்திற்காக 600 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 200 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வெளியேறூம் தண்ணீர் கடந்த சில நாட்களாக மாசடைந்து உள்ளதாக பவானி அணையின் நீரை பயன்படுத்தும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு இது குறித்து கூறுகையில், ''காளிங்கராயன் கால்வாயில் எல்.பி.டி.,(LBD-Lower Bhavani Dam) மூலம் வழங்கப்பட்டு வரும் தண்ணீர், கடந்த 3 நாட்களாக கருப்பு மற்றும் அடர் நீல நிறத்தில் காணப்படுகிறது. பாசனத்திற்கு எல்பிடியை நம்பியிருக்கிறோம். ரசாயன நீரை பயன்படுத்தினால் பயிர்கள் சேதமடையும் என்பதால் ஆற்றில் இருந்து வரும் நீர் கவலை அளிக்கிறது. குடிப்பதற்கும் தண்ணீர் தகுதியற்றதாக மாறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கோவையில் உள்ள ஆற்றுப்படுகைகள் மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள சாய, சலவை தொழிற்சாலைகள். பல தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. இந்த ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஆற்றில் கலந்து விடுவதே இதற்கு முக்கிய காரணம்” என்றார்.
ஈரோட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சிவகிருஷ்ணன் கூறுகையில், ''இதை தடுக்க, மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில், ஆறு முழுவதும் மாசு அடைந்து நொய்யல் ஆறு போல் மாறிவிடும்,'' என்றார்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, எல்பிடியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மாசுபடுவதாக தெரிவித்தனர்.“இது எங்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் தற்போது 86 அடி தண்ணீர் உள்ளது. ஆற்றில் 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு, அதில் இருந்து காலிங்கராயன் கால்வாயில் பாசனத்துக்கு 600 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 200 கனஅடியும் திறக்கப்படுகிறது. சனிக்கிழமையும் தண்ணீரின் நிறம் வித்தியாசமாக இருந்தது,” என்று ஈரோட்டைச் சேர்ந்த WRD அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“நீலகிரியில் இருந்து அணைக்கு இரண்டு வழிகளில் தண்ணீர் வருகிறது. மோயார் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் சுத்தமாக இருந்தாலும், மேட்டுப்பாளையம் வழியாக அணைக்கு வரும் தண்ணீர், ஆற்றின் கரையோரம் உள்ள தொழிற்சாலைகளால் மாசுபடுகிறது. இந்த ரசாயனக் கழிவுகள் எப்போது ஆற்றில் விடப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியாது. தற்போது அணையில் தண்ணீர் குறைந்து ரசாயன கழிவுகள் வெளியேறி வருகிறது. இந்த அணையின் நீரை நம்பி சுமார் 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 மில்லியன் மக்களும் குடிநீருக்காக இதை நம்பியுள்ளனர். இதே நிலை நீடித்தால், பவானி ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் விவசாயம் மற்றும் குடிநீருக்கு லாயக்கற்றதாக மாறும்,'' என்றார்.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மாசுபடுவது இதுவே முதல்முறை என WRD இன் மற்றொரு அதிகாரி தெரிவித்தார். ஈரோட்டைச் சேர்ந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய (Pollution Control Board- PCB)) அதிகாரி ஒருவர் கூறுகையில், “திங்கள்கிழமை அதிகாரிகள் குழு அணையை பார்வையிடும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும் காண்க:
பயிர்க்கடன் வழங்குவதில் சாதனை- சேலம் மாவட்ட ஆட்சியர் பெருமிதம்
Share your comments